• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

ஆகஸ்ட் 20-ல் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் லட்சம் மரக்கன்றுகள் கொடுக்கப்படும்… ஆர்.பி.உதயகுமார் தகவல்!

Byகுமார்

Jul 24, 2023

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மதுரையில் ஆகஸ்ட் 20ம்தேதி நடைபெறும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில்  லட்ச குடும்பங்களை  பங்கேற்கின்ற வகையில் லட்ச மரக்கன்றுகளை நேரில் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும் என முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்து வெள்ளோட்டமும் நடத்தி இருக்கிறார்.

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி, மதுரையில் வீர வரலாற்றில், பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து மாநாடு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 பொதுமக்களும் இந்த மாநாட்டில் அதிக அளவில் கலந்து கொள்ளும் வகையில் கழக அம்மா பேரவையின் சார்பில், மாநாட்டு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் மூலம் குடும்பம் குடும்பமாக மதுரை மாவட்ட மக்கள் பங்கேற்கும் வகையில், மதுரை பட்டினத்தை பசுமையாக்கிட, பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்க நிகழ்ச்சி, மதுரை செய்தியாளர்கள் அரங்கம், அதனைத் தொடர்ந்து மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ தொழிளார்கள், கல்லூரி மாணவர்கள், சாலையோர வியாபார பெருமக்கள், தாய்மார்கள் மற்றும் பொதுமக்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பா.டாக்டர் சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தமிழரசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழகன், மாநில எம் ஜி ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் புதூர்அபுதாகீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:

 மதுரை மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி செய்து கொடுத்தார். குறிப்பாக நத்தம் சாலையில் ஆயிரம் கோடியில் பறக்கும் பாலம், எய்ம்ஸ் மருத்துவமனையை, 1,296கோடியில் குடிநீர் திட்டம்,30 கோடியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காளவாசல் அருகே உயர்மட்ட மேம்பாலம், குருவிக்காரன் சாலை, ஓபுளாபடித்துறை, பாண்டி கோவில் ஆகிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலம்,  384 கோடியில் வைகை நதிக்கரையில் இரண்டு வழி சாலைகள், வைகை ஆற்றின் குறுக்கே ரெண்டு செக்டேம்கள்,  4 புதிய வட்டங்கள், 2 புதிய கோட்டங்கள், இப்படி எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாவட்ட செய்த திட்டங்களை சொல்லிக் கொண்டே போகலாம். மதுரை மக்கள் என்றைக்கும் நன்றி உணர்வோடு இருப்பார்கள். முல்லைப் பெரியாரில் மாபெரும் சட்ட போராட்டத்தில் தீர்வு கண்ட அம்மாவிற்கு இதே மதுரையில் தான் மக்கள் ஒன்று திரண்டு நன்றினை தெரிவித்தனர். அதேபோல் மதுரை மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்த திட்டங்களுக்கு குடும்பம் குடும்பமாக பங்கேற்று நன்றியினை செலுத்த உள்ளனர்.

இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் பேறிஞர் அண்ணா நடத்தினார்  ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில் புரட்சித்தலைவர் நடத்தி, மதுரை மண்ணிற்கு பெருமையை சேர்த்தார். எட்டாவது உலகத்தமிழ் மாநாட்டை அம்மா தஞ்சை தரணியில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து மதுரையில் தமிழ் சங்க கட்டிடம் அமைக்கப்படும் என்று அம்மா கூறினார் ,அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அந்த கனவை நனவாக்கினார்.

மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் ஒரு லட்சம் குடும்பங்களை சந்தித்து, ஏறத்தாழ 10 லட்சம் மக்களை பங்கேற்று, வரலாறு படைக்கும் வண்ணம் மரக்கன்றுகளை மக்களுக்கு நேரில் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இளைஞர்கள், தொழிலாளர்கள், படித்தவர்கள், விவசாயிகள், தாய்மார்கள் என அனைத்து மக்களுக்கும் மரக்கன்று வழங்கப்படும். இதன் மூலம் மதுரை பட்டினம் பசுமை பூமியாக மாறும்.

ஏற்கனவே மதுரை மாவட்டத்தில் பல்வேறு சாலை பணிக்காக மரங்கள் வெட்டப்பட்டது அந்த இடத்தில் மரங்களை வைத்து மாநாடு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும். இந்த மாநாட்டின் மூலம் மதுரை பசுமையாக்குவோம் கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை தந்து பொற்காலமாக இருந்தது.

அதனை தொடர்ந்து தங்கள் நன்றினை தெரிவிக்கும் வண்ணம் மதுரை மக்கள் குடும்பம் குடும்பமாக எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க தயாராக உள்ளனர்.

 ஏற்கனவே தமிழகம் முழுவதும் மாநாடு குறித்து பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையிலிருந்து மாநாடு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த இந்த மரம் நடும் விழாவில், மதுரை மாவட்டத்தில் 10 லட்சம் மக்களை பங்கேற்க பிரச்சாரத்தை மேற்கொள்வோம். 

இந்த மாநாடு இந்திய வரலாற்றில் மட்டுமல்லாது, உலக வரலாற்றில் இடம் பிடிக்கும் வகையில் இருக்கும் எனக் கூறினார்.