தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் தளிகை விடுதி கிராமத்தில் அமைந்திருக்கும் அறநிலையத்துறைக்கு சொந்தமான திருப்பனங்காருடையார் கோயில் கும்பாபிஷேக விழாவில் சம உரிமை வழங்க வலியுறுத்தி சாலை மறியல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஊரணிபுரம் தளிகை விடுதி கிராமத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு திருப்பனங்காருடையார் கோயில். இந்தக் கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் இந்தக் கோயிலில் திருப்பணிகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று பணிகள் நிறைவேற்றத்தை தொடர்ந்து வருகின்ற எட்டாம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோயில் நிர்வாக கமிட்டியில் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் பட்டியல் இனத்தோருக்கும் ஐந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு அந்த சமூகம் சார்பில் 2 லட்சம் நிதியும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பட்டியல் இனத்தவரை ஒதுக்கி விட்டு கடந்த 30 ஆம் தேதி பந்தல் காணும் முகூர்த்த நிகழ்ச்சியின் நடைபெற்றதாகவும் மேலும் வருகின்ற எட்டாம் தேதி நடைபெறவிருக்கும் குடமுழுக்கு நிகழ்ச்சியிலும் தங்களை தவிர்க்க இருப்பதாகவும் கூறி இதனை கண்டித்து ஊரணிபுரம் கடைவீதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது. இதனை எடுத்த தகவல் அறிந்த திருமணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்புக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் சமூக தீர்வு காணப்படும் என தெரிவித்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலில் விசிக மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.








