• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை வில்லாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

ByKalamegam Viswanathan

Sep 8, 2024

மதுரை வில்லாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில். இக்கோவில் பாண்டிய மன்னர்களின் படைத்தளபதிகளாக விளங்கிய அழகப்பா பிள்ளை, தானப்ப பிள்ளை ஆகியார் வகையறாக்களின் குடும்பத்திற்கு பாத்தியப்பட்டது.

இவர்கள் பாண்டிய மன்னர்கள் காலத்தில் படைத்தளபதிகளாக இருந்தபோது அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் வில்லாபுரத்தில் உள்ள பாகற்காய் மண்டபத்தில், சொக்கர் எழுந்தருளுவர்.

அதேபோல் வில்லாபுரம் காளியம்மன் கோவிலில் பாண்டிய மன்னர் காலங்களில் போர் பயிற்சி மற்றும் யுத்த காலங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நடைபெறும் நிகழ்ச்சியாகும்.

தங்களை பாதுகாக்கும் காவல் தெய்வமாக விளங்கும் காளியம்மன் கோவிலில் தளபதிகளாக இருந்த அழகப்பபிள்ளை, தானப்பபிள்ளை ஆகியோர் முக்கிய முடிவுகளின் போது சிறப்பு பூஜைகள் செய்து பின் தொடங்குவர்.

இந்நிலையில் 16 வருடங்களுக்கு பின் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த காளியம்மன் கோவிலில் பாண்டிய மன்னர்களின் தளபதிகளாக இருந்த அழகப்ப யிள்ளை, தானப்ப பிள்ளை வாரிகள் அறங்காவளர்களாக இருந்து பூஜைகள் நடத்தி வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி யாகசாலையில் முதல் கால இரண்டாம் கால, வேள்விகள் நடைபெற்றது. பின்னர் 2ம் நாள் நிகழ்ச்சியாக 3ம் கால யாக சாலை பூஜையும் பரிகார சாந்தி பூஜையுடன் நடைபெற்றது.

மூன்றாம் நாளான இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் கோ பூஜையுடன்
பூர்ண ஹூதியுடன் நிறைவு பெற்றது.

சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகத்திற்கு அறங்காவலர்களுக்கு பரிவட்டம் கட்டி கும்பங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவில் கலசங்களுக்கு புனித நீரில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் தலைவர் மரகதம், தனசேகரன், காளி தாஸ், கந்தரம், ராமச்சந்திரன், கோபால் , ரமேஷ் (எ) ராமசந்திரன், செந்தில்குமார் ஆகியோர் கும்பாபிஷேக நிகழ்சிகளை செய்திருந்தனர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை மண்டல இணை ஆணையர் செல்லத்துரை, தெற்கு சரக ஆய்வாளர் மதுசூதனன், செயல் அலுவலர் சங்கரேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.