• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயங்களில் கும்பாபிஷகம்..,

ByR. Vijay

Sep 5, 2025

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த மணலூரில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் சுவாமி, ஸ்ரீ மகா காளியம்மன், ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயங்கள் அமைந்துள்ளது.

இவ்வாலயங்களில் 33 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷகம் இன்று நடைப்பெற்றது. கும்பாபிஷக விழா கடந்த 1 ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது தொடர்ந்து கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, ரக்‌ஷாபந்தனத்தோடு முதல்கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பூர்ணாஹூதி தீபாராதனை நடைப்பெற்று வந்தது. இன்று நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று பூர்ணாஹூதி தீபாரதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைப்பெற்றது. சிவாச்சாரியர்கள் புனித நீர் அடங்கிய கலசத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் ஓத ஆலய கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷகம் நடைப்பெற்றது. தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. தொடர்ந்து செல்வ விநாயகர், அபிராமி சமேத சுந்தரேஸ்வரர், மகா காளியம்மன்,ஆஞ்சநேயர், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.