• Fri. Jan 9th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து தொடங்கி வைத்த குமரி ஸ்டீபன்..,

கன்னியாகுமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் பயனாளிகளுக்கு ரூ.3000.00 மற்றும் செங்கரும்பு கொடுத்து கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார்.

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் தளபதி யார் அவர்கள் குடும்பத்துக்கு 3000 ரூபாய் வழங்குகின்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததை முன்னிட்டு கன்னியாகுமரியில் குமரி நகராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் குடும்பத்துக்கு ரூபாய் 3000 வழங்கி தொடங்கி வைத்த போது இந்த நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் திருமதி ஜெனஸ் மைக்கேல், நகர்மன்ற உறுப்பினர்கள் இக்பால், சிவசுடலைமணி, மாவட்ட பிரதிநிதி நாஞ்சில் மைக்கேல், மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் புஷ்பராஜ், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு துணை அமைப்பாளர் நிசார், நகர இளைஞரணி அமைப்பாளர் ஷ்யாம் கழக நிர்வாகிகள் முகமது ஷேக், பாகுலேயன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். பொங்கல் பரிசாக ரூ.3000.00 தந்துள்ளது. மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளாதாக. புன்னகை மலரும் முகத்துடன் மக்கள் தெரிவித்தனர்.