கன்னியாகுமரியில் இலக்கிய செல்வர் குமரி அனந்தனின் வரலாற்று கூடம் அரங்கில் செப்டம்பர் திங்கள் 8_ம் தேதி மாலை நடைபெற்ற அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு முன்னிலையில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்கு, குமரி ஸ்டீபன் தலைமையில், சிறப்பு விருந்தினராக தில்லை செல்வம் பங்கேற்றார்.
கழக தலைவர் மு.க.ஸ்டாலின் வழி காட்டுதலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம்.இன்று அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்தின் மூன்று இடங்களில். கன்னியாகுமரி, பஞ்சலிங்கபுரம், கொட்டாரம் பகுதிகளில் நடைபெற்றது.மூன்று இடங்களில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு பங்கேற்று எதிர் வரும் (செப்டம்பர்14)ம் தேதி நாம் நடத்திய செயல் வீரர்கள் கூட்டத்தின் “மினிட்” புத்தகத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதை தெரிவித்த ஒன்றிய செயலாளர் பாபு, எதிர் வரும் 17ம் தேதி சென்னை ஒய்எம்சியே திடலில் நடைபெறும், கழகத்தின் 75_வது ஆண்டுவிழாவில், தமிழக முதல்வர் அவரது அமெரிக்கா பயணத்தை நிறைவு செய்த பின் நம் முதல்வர் பங்கேற்கும். நம் கழகத்தின் குடும்ப விழா என தெரிவித்தவர்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் குமரி மாவட்டத்தில் ஆறு சட்டமன்ற தேர்தலில் நம் கூட்டணி நான்கு தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்றோம்.
நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற முடியாத நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஆறு தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் அதிக வாக்குகள் வாங்கி. பாஜக,அதிமுக வை பின்னுக்கு தள்ளியிருப்பது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிய மகளிர் உரிமை தொகை, இலவசபேரூந்து, மாணவ, மாணவி கல்வி உதவித் தொகை, பள்ளியில் காலை உணவு திட்டம் இவை எல்லாவற்றையும் நாம் தமிழக பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதை நாம் கடமையாக கொண்டு, இன்னும் 18_மாதங்களில்,2026 தேர்தலில் நம் கூட்டணியின் வெற்றியுடன், திமுக 200_இடங்களில் வெற்றி பெற வேண்டும் என தெரிவித்தார்.


நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட கூடுதலாக வாக்குகள் வாங்க உழைத்த கட்சியினரை பாராட்டி . அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு துண்டு அணிவித்து பாராட்டினார்.
நிகழ்வில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக கவுன்சிலர்கள், அழகன் கெய்சர், நாஞ்சில் மைக்கேல் , புஷ்பராஜன், பொன் ஜான்சன் ஆகியோர் பங்கேற்றனர்.


நிகழ்வில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு திமுக தொழிற்சங்கம் சார்பில் அடையாள அட்டை அணிவித்தார் அகஸ்தீசுவரம் ஒன்றிய செயலாளர் பாபு அணிவித்தார்.
