தமிழக கடற் பரப்பில் பாதுகாப்பு ஆப்ரேஷன் ஷாகர் ஹாவாச் இன்றும் நாளையும் நடைபெறுவதின் பகுதியாக குமரி கடலிலும் நடைபெறுகிறது.
தமிழகத்தில் சென்னை முதல் தென்கோடி கன்னியாகுமரி கடல் பரப்பில் இரண்டு நாட்கள்.(ஜூன்19,20) தேதிகளில் காவல்துறை, கடலோர காவல்படை, கடற் படை(நேவி) இணைந்து நடத்தும் ஆப்ரேஷன் ஷாகர் ஹாவாச் பாதுகாப்பு சோதனை கண்காணிப்பு பணி கன்னியாகுமரி கடற் பரப்பில் இன்று காலை 6மணிக்கு தொடங்கியது, நாளை மாலை 5_மணி வரை நடைபெறும் இந்த பாதுகாப்பு பணி குமரி மாவட்டத்தில். கூடன்குளம் முதல் நீரோடி வரை கடல் பரப்பில் நடைபெறுகிறது. இதில் கடலோர காவல்படையின் மூன்று படகுகள் பயன் படுத்தப்படுகிறது.
இன்று நடைபெறும் ஆப்ரேஷன் ஷாகர் ஹாவாச் கடல் பாதுகாப்பு பணியில் காவல்துறை, கடலோர காவல்படை,கடற்படை மற்றும் கடலோர காவல்படை யின் உயர் அமைப்பினரும் பங்கேற்கின்றனர். கடல் பாதுகாப்பு அதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு சமுகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இத்தகைய நிகழ்வுகள் நடத்தப்படுவதாக. கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.