குமரி மண் சமத்துவத்தின் மண். அய்யா வைகுண்டர், ஜூவா ஆகியோரது பாதம்
படிந்த மண்.
கன்னியாகுமரி மாவட்டத்தின், 24_வது மாவட்டம் மாநாடு கடந்த 30 மற்றும் 1_ம் தேதி நாகர்கோவிலை அடுத்த வெட்டூர்ணிமடம் தனியார் மண்டபத்தில் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெற்றது.

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தின் முன் பகுதியில் உள்ள திடலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்ற நிகழ்வில் சிறப்பு பேச்சாளராக மத்திய குழு உறுப்பினர் விஜூ கிருஷ்ணன் பங்கேற்றார்.
நிகழ்வில் பேசிய கனகராஜ்.., குமரி மாவட்டத்தில் பொன். இராதாகிருஷ்ணனையும் காணவில்லை, பாஜாகவையும் காணவில்லை. பொன்னார் ஜூலை 1 என்று ஒரு போராட்டத்தை பாஜக ஆட்சியில் இல்லாத போது மூன்று ஜூலைகளில் தொடர்ந்து நடத்தினார். ஆட்சி அமைத்தது, இவர் துணை அமைச்சராகவும் இருந்தும். ஜூலை_1 யில்.இவர் நடத்திய போராட்டத்தை அதிகாரம், ஆட்சி இருந்தும் நிறைவேற்றவில்லை என பேசினார்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மத்திய குழு உறுப்பினர் விஜூகிருஷ்ணன். அவரது பேச்சின் தொடக்கத்தில் வெளிபடுத்திய கருத்து கன்னியாகுமரி மண் அய்யா வைகுண்டர், பொதுவுடைமை சித்தாந்த வாதியான ஜூவாவும் நடந்த மண். இங்கே சாதியை சொல்லி அரசியல் நடத்த முடியாது. உங்களது தாய்மொழியில் என்னால் சிறப்பாக பேச முடியாது என்றாலும், ஆங்கிலமும், தமிழும் கலந்து பேசுவேன்.
கூறை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானாம்.!? என்று தமிழில் உள்ள ஒரு அழகான பழமொழியை பல மோடைகளில் பலர் சொல்ல நான் செவிமடுத்திருக்கிறேன். பிரதமர் மோடியும் அப்படிபட்டவரே.

மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத 56″மோடி, ரஷியா உக்ரைன் மற்றும் இஷ்ரேல்_பாலஸ்தீனம் போரை நிறுத்த போவதாக சொல்லுவது ஒரு வேடிக்கை, இப்படியே போசி மக்களவை ஏமாற்றுவது மோடியின் வாடிக்கை.
ஒன்றியத்தின் இப்போதைய மோடியின் ஆட்சி மக்களுக்கானது அல்ல. இது இரண்டு பணக்காரர்களுக்கான ஆட்சி. பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு நசூக்கி வருகிறது. விவசாயிகளை வஞ்சிக்கும் அரசாக பா_ஜனதா உள்ளது.
பெரும் பணக்காரர்கள் வங்கிகளில் வாங்கிய பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்யப்படுகிறது.ஆனால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்றார்.
நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நூர் முகம்மது,லீமாரோஸ், குமரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அந்தோணி, அகமது உசேன், அருணாசலம், மாவட்ட செயலாளர் செல்லசாமி ஆகியோர் பங்கேற்றனர்.