• Tue. Jun 18th, 2024

குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை….

ByNamakkal Anjaneyar

Jun 14, 2024

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்து குளத்தை சுத்தம் செய்து புதிய நீர் விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்கலம் பாண்டீஸ்வரர் கோவில் எதிரில் கோவில் குளம் ஒன்று உள்ளது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நீரை சேமித்து தண்ணீர் சுத்தமாக இருக்க மீன்களை விட்டு வளர்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென மீன்கள் செத்து மிதக்க தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் தண்ணீர் அசுத்தமாக இருக்கலாம் என கருதி நேற்று புதிய தண்ணீரை அந்த குளத்திற்குள் விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் மீன்கள் உயிருக்கு போராடும் நிலையில் செத்து செத்து மிதக்கின்றன. செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அகற்றிவிட்டு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீர் விட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *