• Sat. May 11th, 2024

குழித்துறை 98_வது ஆண்டு வாவுபலி பொருட்காட்சி.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலம் முதல் ஒவ்வொரு ஆடி மாதத்தில் ஒரு மாதம் நடைபெறும் விவசாய பொருட்களின் கண்காட்சி வரிசையில் இந்த ஆண்டு (2023)ல் நடைபெறுவது 98_வது ஆண்டை எட்டியுள்ளது.

விவசாய கண்காட்சியில் தென்னை, மாங்காய், கொய்யாப்பழம், சக்கை, சவுக்கு உட்பட விவசாய பல்வேறு விதைகள், விவசாயத்திற்கு(வயலில்) பயன்படும் மண்வெட்டி போன்ற உபகரணங்கள் உடன் மண்பானைகள், பெண்களுக்கான அழகு சாதனங்கள் என்று கடந்து 50_ஆண்டுகள் விற்பனை செய்யப்பட்ட ஆடி மாதம் முழுவதும் தொடரும் வாவு(அமாவாசை) பலி(புனித நீராடல்) கண்காட்சி குமரி மாவட்டத்தில் மிக பழமையான இன்றும் தொடரும் கண்காட்சியில் பழமையுடன் புதுமையானதாக பல்வேறு வீட்டு பயன் பாட்டு பொருட்களுடன், நவின விளையாட்டு பொருளாக ராட்டினம் உட்பட பல்வேறு விளையாட்டு வகைகளுடன் அன்று முதல் இன்று வரை மரண கிணரு மோட்டார் பைக் ஓட்டும் சாதனையும் தொடர்கிறது. கண்காட்சி திடலை உரசி செல்லும் தாம்பரபரணி ஆற்றில் இப்போது படகு சவாரி என நவீனம் பெற்றுள்ளது.

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வரும் வாவுபலி கண்காட்சியை குடும்பம்,குடும்பமாக மக்களின் வருகை.அதுவும் விடுமுறை தினத்தில் ஏராளமான மக்களின் வருகை என்பது அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெல் களஞ்சியமாக குமரி இருந்ததால். இந்த மாவட்டத்தின் மற்றொரு புகழ் பெயர் “நாஞ்சில் நாடு”. ஆடி அமாவாசை தினத்தில் இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் இன்று நிரம்பி வழிகிறது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் வாவுவலி பொருட்காட்சிக்கு இன்று வருகை தந்து மக்களோடு மக்களாக வாவுபலி கண்காட்சி முழுவதும் சுற்றி பார்த்தவர். மண்பாண்டம் விற்பனையாளரிடம் அங்கிருந்த உண்டியல் அனைத்தையும் வாங்கி கண்காட்சி பார்க்க பெற்றோர்களுடன் வந்திருந்த சிறுவர், சிறுமிகளுக்கு கொடுத்து.பள்ளிக்கு செல்லும் போது பெற்றோர் தரும் காசில் தினம் சிறிது சேமிக்க வேண்டும் என சொல்லி சிறுசேமிப்பின் அவசியத்தை உணர்த்தினார்.

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் அல்லாது முன்னாள் திரைப்பட நடிகர் என்ற புகழும் உள்ள விஜய்வசந்த் உடன் ஏராளமான இளம் பெண்கள், பல குடும்பங்கள் இவரோடு “செல்ஃபி”எடுத்து கொண்டதை காண முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *