விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வெம்பக்கோட்டை ஒன்றியம் விளாமரத்துபட்டி கிராமத்தில் கிருஷ்ணவேணி பட்டாசு ஆலை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் சிலைக்கு பால் , பன்னீர் இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.