• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

குமரியில் நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த சரஸ்வதியின் 7 வயது சிறுமி கடத்தல்

சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில் 100_க்கும் அதிகமான நரிக்குறவர் சமூக நாடோடி கூட்டத்தை சேர்ந்த குடும்பங்கள் வெகு காலமாக கன்னியாகுமரி கடற்கரை மற்றும் கடற்கரை சாலை ஓரங்களில் குடியிருந்து பாசி மணி மாலைகள், மயில் எண்ணை, புலி நகம் என விற்பனை செய்வது காலம், காலமாக நடந்து வருகிறது.

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் நேற்று (மே_12)ம்தேதி மாலையில், முக்கடல் சங்கமம் பகுதியில் ஒரு இளைஞனிடம், கன்னியாகுமரியில் தங்கி பாசி, மாலை, ஊசி விற்பனை செய்யும் ஆந்திராவை சேர்ந்த சரஸ்வதி என்ற பெண்ணின் மகள் 7வயதான சங்கீதா, கடற்கரையில் சுற்றுலா வந்த இளைஞனிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பது, அந்த சுற்றுலா வந்த இளைஞன் பேசிக்கொண்டு இருந்த இடத்தை விட்டு எழுந்து செல்வதும், அந்த இளைஞன் பின்னால் 7வயது பெண்குழந்தை சங்கிதா செல்வதும் கடற்கரை பகுதியில் உள்ள கெமராவில் பதிவாகியுள்ளது. ஆனால் அந்த இளைஞன் அழைத்து அந்த சிறுமி சென்றாள் என்பது போன்ற பதிவை கெமராவில் இல்லை.

இரவு எப்போதும் போல் நாடோடி கூட்டங்கள் தங்கி இருக்கும் பகுதியில் ஆந்திராவை சேர்ந்த சரஸ்வதி தங்கியிருக்கும் பகுதிக்கு 7_வயது சிறுமி சங்கீதா வராத நிலையில் கடற்கரையில் பல இடங்களில் நாடோடி கூட்டத்தினர் சிறுமி சங்கீதாவை தேடிய நிலையில் அக்கம் பக்கத்தில் புகார் தெரிவித்ததுடன், சிறுமியை காணாத நிலையில் கன்னியாகுமரி காவல் நிலையத்தில்புகர் செய்ததின் அடிப்படையில் காவல்துறை கடற் கரை பகுதியில் உள்ள கெமராவை சோதனை செய்த போது, சிறுமி ஒரு இளைஞனிடம் வெகு நேரம் பேசிக்கொண்டு இருப்பதும், அந்த இளைஞன் அங்கிருந்து கிளம்பி செல்வதும், இளைஞனின் பின்னாலே சிறுமி சங்கீதா செல்வதும் போன்ற காட்சி பதிவின் அடிப்படையில் காவல் துறை குறிப்பிட்ட இளைஞனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளதுடன், மூன்று தனிப்படை அமைத்து காணாது போய் உள்ள நரிக்குறவர் சமுகத்தை சேர்ந்த 7வயது சிறுமி சங்கீதாவை காவல் துறை தேடுகின்றனர்.