வரும் பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாவதாக இருந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ மற்றும் ‘ராதே ஷியாம்’ போன்ற படங்கள் வெளியாகாததால் தெலுங்கு படவுலகில் மிகப் பெரிய மாற்றம் நடைபெற்றுள்ளது.
இந்தப் பொங்கலுக்கு குறைந்த பட்ஜெட்டில் தயாராகியுள்ள 15 தெலுங்கு படங்கள் வெளியாகவுள்ளன. இதில் ஒன்று தமிழ் நடிகர்கார்த்தி நடித்த படம்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் கார்த்தி, கேத்தரின் தெரேசா மற்றும் பலர் நடிப்பில் 2014-ம் ஆண்டு வெளியான படம் ‘மெட்ராஸ்இந்தப் படத்தைத்தான் இப்போது ஏழு வருடங்களுக்குப் பிறகு தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் நேற்று வெளியிட்டது.
இந்த டப்பிங் படத்திற்கு ‘நா பேரு சிவா 2’ என பெயர் வைத்துள்ளார்கள். இதற்கு முன்பு கார்த்தி நடித்த ‘நான் மகான் அல்ல’ படத்தை 2010-ம் ஆண்டில் ‘நா பேரு சிவா’ என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அப்போது அந்தப் படத்திற்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனால், அதே பெயரில் ‘2’ என்பதை சேர்த்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் போல இந்த ‘மெட்ராஸ்’ படத்தையும் ‘நா பேரு சிவா 2’ என தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிடுகிறார்கள்.இந்தப் படம் வரும் ஜனவரி 13-ம் தேதி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாகிறது.