• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இன்று முதல் கன்னியாகுமரி கலங்கரை விளக்கத்தை லிப்ட் மூலம் பார்வையிட அனுமதி

கன்னியாகுமரியில் கடந்த 1971_ம் ஆண்டு திறக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தியின் மேலே நின்று பார்த்தால் கிழக்கு, தெற்கு மேற்கு என மூன்று பகுதிகளிலும் முக்கடல், மூன்று திசைகளிலும் வெள்ளலைக் கூட்டம் துள்ளி வரும் அலைகளின் அழகையும்.வடக்கு பகுதி முழுவதும் நிறைந்த தென்னை,வாழை, ரப்பர் மரங்களின் பச்சை வண்ணம்.பார்ப்பதற்கு பச்சை பட்டு விரித்தால் போன்று காட்சியளிக்கும்.
கலங்கரை விளக்கம் பகுதியின் தரை முதல் . விளக்கின் சிம்மிணி இருக்கும் பகுதிக்கு செல்ல பல நூறு படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டியதால். கலங்கரை விளக்கத்தை பார்த்து,ரசிக்க விரும்பும் முதிர் வயதினர் படி கட்டுகளை கடந்து செல்வது கடினமாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்(2019)ல் கலங்கரை விளக்கம் பராமரிப்பு மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் மின் தூக்கம் (லிஃப்ட்)அமைக்கும் பணியும் தொடங்கியது.

பராமரிப்பு காலத்தில் தான் கொரோனா என்னும் பெரும் தொற்று பரவியதில்.உலகின் இயக்கம் பெரும் பகுதி தடை பட்டபோது.கலங்கரை விளக்கம் பணியும் இரண்டு ஆண்டுகள் தடைப்பட்டது.இப்போது பணிகள் முழுமை பெற்று இன்று முதல் (13.01.23)முதல் பார்வையாளர்கள் மின் தூக்கி மூலம் கலங்கரை விளக்கம் உச்சி பகுதிக்கு சென்று தென் கோடியில் எழில்மிகு காட்சியை, உள்ளூர் மக்கள் முதல் உலக சுற்றுலா பயணிகளும் காணும் வாய்ப்பு இன்று முதல் மீண்டும் இன்று மாலை.3மணி முதல் 5_மணி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவதாக.கன்னியாகுமரி கலங்கரை விளக்கம் தலைமை அதிகாரி தெரிவித்தார்