செய்தி சேகரிக்க மட்டும் நீங்கள் வராமல் என்னை வாழ்த்தி அனுப்பவும் வந்திருப்பதாக நான் நினைக்கிறேன்.

உங்கள் வாழ்த்துகள் மற்றும் மக்களின் வாழ்த்துக்களுடன் டெல்லியில் இன்று உறுதிமொழி ஏற்று எனது பெயரை பதிவு செய்ய உள்ளேன்.
இது எனக்கு இந்தியனாக கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதையும் மற்றும் கடமையையும் நான் செய்ய உள்ளேன்.
பெருமையோடு தான் சொல்லிக் கொள்கிறேன். எனது கண்ணிய பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது. சில விஷயங்கள் இங்கு பேசுவது போல அங்கு பேசக்கூடாது. அங்கு பேசுவது போல இங்கு பேசக்கூடாது.
எனது ஆறாண்டு கால பயணத்தை கவனித்தால் எதை நோக்கிச் செல்கிறேன் என்பது புலப்படும்.