குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, மண்டைக்காடு, கொல்லங்கோடு,
காளிமலை ஆகிய நான்கு சக்தி ஸ்தலங்களில் ஒன்றாக காளிமலை
திகழ்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உயர்ந்த மலை.ஒவ்வொரு
ஆண்டும் செப்டம்பர் 27_ம் தேதி. கன்னியாகுமரியில். காலை 7.00 மணிக்கு
முக்கடல் சங்கமத்தில் சமுத்திர பூஜையுடன் புனித கும்பம் நிறைத்த பின்.
தேவி பகவதியம்மனை தரிசனம் செய்துவிட்டு. சமுத்திரகிரி ரத யாத்திரை தொடங்குகிறது. செப்டம்பர் 30ம்தேதி காளிமலை கோயிலை சென்று அடையும்.

புனித கும்பத்தின் நீரை தலையில் சுமந்தும், இருமுடிகட்டியும், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில் முன்பிருந்து காளி மலை நோக்கி பக்த்தர்களின் நடைபயணம் காளிமலை நோக்கி புறப்படயிருப்பதையும். கன்னியாகுமரியில் தொடங்கும் முதல் நாள் நிகழ்வில். கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி, சின்னதம்பி (தலைவர் கிருஷ்ணன் கோவில்
மேல் மருவத்தூர் ஆதி சக்தி பீடம், சிவசந்திரர் அடிகளார் (அன்பாலயம் சாமிதோப்பு)
என்ற தகவல்களை நாகர்கோவில் செய்தியாளர்கள் அரங்கில் நடை பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விழாக்குழு தலைவர் பத்மகுமார் தெரிவித்தார்.இந்த நிகழ்வில் விழா குழுவின் துணைத் தலைவர் முத்துராமன், உறுப்பினர்கள்
ராஜசேகர், வேலுதாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.











; ?>)
; ?>)
; ?>)