விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செல்லியாரம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புரட்டாசி திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.இத் திருவிழாவிற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் அக்ரகாரம் தெருவில் உள்ள ஸ்ரீ பூதத்தாழ்வார் கோவிலிலும் சிறப்பு தரிசனத்தில் கலந்துகொண்டு வழிபட்டார். உடன் கோவில் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.