• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு.,

ByKalamegam Viswanathan

Aug 28, 2025

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்லக்கூடிய ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று காலை 5 மணி அளவில் துபாயில் இருந்து புறப்பட வேண்டிய விமானம் 6:40 க்கு அங்கிருந்து புறப்பட்டு 9.50 மணியளவில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தது.

பின்னர் மீண்டும் இங்கிருந்து 12:20 மணிக்கு புறப்பட வேண்டியது விமானம் 130 பயணிகளுடன் ஒரு மணி அளவில் புறப்பட தயாராக ஓடுதள பாதைக்கு சென்ற போது தொழில்நுட்ப கோலாறு ஏற்பட்டதால் மீண்டும் விமானநிலையத்தில் கொண்டுவரப்பட்டு பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டுள்ளனர்.

தற்போது பயணிகள் விமான நிலைய வளாகத்திற்குள் காத்திருக்கும் சூழலில் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் விமானம் மீண்டும் புறப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

நீண்ட நேரமாக விமான நிலையத்திற்குள் காத்திருப்பதால் முதியோர் மற்றும் குழந்தைகள் மிகவும் அவதிப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் ஸ்பைஸ் ஜெட் விமானம் அடிக்கடி இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நீண்ட நேர தாமதத்திற்கு பிறகு கிளம்புவதாகவும் இதனால் பயணிகள் மிகுந்த அவதி கொள்வதாகவும் உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.