• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ஜீவசாந்தி அறக்கட்டளையினர் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணி

BySeenu

Mar 4, 2025

கோவையில் செயல்பட்டு வரும் ஜீவசாந்தி அறக்கட்டளையினர் இரயில் பயணிகள், விடுதி மாணவர்கள், மருத்துவமனையில் தங்குபவர்களுக்கு என நோன்பு வைப்பவர்கள் அதிகாலை உணவை தேடி சென்று வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கான பணிகளை பார்வையிட்ட தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி ஜீவசாந்தி குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு வைப்பதை கடமையாக செய்கின்றனர். அதன் படி அதிகாலையில் சஹர் உணவு எனும் உணவை உட்கொண்டு நோன்பை கடைபிடிக்கின்றனர்.

இந்நிலையில் தொழில் நகரமான கோவையில் வடமாநில தொழிலாளர்கள், கல்லூரியில் தங்கி பயிலும் மாணவர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் நோன்பு வைக்கும் நிலையில் சஹர் உணவுக்காக அதிகாலை அவதிபடும் நிலை உள்ளது.

இது போன்றவர்களின் தேவை அறிந்து கடந்த எட்டு வருடங்களாக சஹர் உணவு தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று உணவு வழங்கும் பணியை ஜீவசாந்தி அறக்கட்டளையினர், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு ரமலான் மாதம் துவங்கிய நிலையில், இது போன்று வெளியூர் வாசிகள் மற்றும் பயணிகளுக்கு சஹர் உணவு தயாரித்து உணவு வழங்கும் பணிகளை தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகமது ரபி துவக்கி வைத்தார்.

இதற்கான பணிகளை நேரில் பார்வையிட்ட அவர், ஜீவசாந்தி அறக்கட்டளையின் நிறுவனர் சலீம் மற்றும் குழுவினர்களை பாராட்டினார்.

தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்..,

வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் இருந்து கோவையில் இஸ்லாமியர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் வசித்து வருவதாகவும், இதில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு அணையா அடுப்பின் வாயிலாக,அனைத்து மதத்தினர் இணைந்து ஸஹர் உணவை அவர்களது இருப்பிடத்திற்கே சென்று வழங்குவது உள்ள படியே பாராட்டுக்குரியது என புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்ச்சியில் ஜீவசாந்தி சலீம்,அஷ்ரப்,சஹனாஸ்,உமா,ஜெயந்தி,பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர், இஸ்மாயில், அபுதாகீர்,டிஸ்கோ காஜா, பூக்கடை சுலைமான், கோழிக்கடை செந்தில், கோவை தல்ஹா உட்பட பலர் உடனிருந்தனர்.