அரியலூர் அண்ணா சிலை அருகே, ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு அளித்த வாழ்வாதார வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, உரிமை மீட்பு உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தினர்.


பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி 23 .08 .2010 க்கு முன்னதாக பணி ஏற்ற ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களில் இருந்து TET தேர்விலிருந்து விலகளித்து ஆசிரியர்களை பாதுகாத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்பி விட வேண்டும்,சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக கருதி ,உயர்நீதிமன்ற தீர்ப்புப்படி, அவர்களுக்கு உரிய பணப்பயன் வழங்கிட வேண்டும்,


21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளது. உடனே வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு நிர்வாகிகள் நம்பிராஜ், துரை க.சுந்தரமூர்த்தி, த .பெரியசாமி, சீ.பூவண்ணன், ச . ஜேசுராஜ்,என் வேல்முருகன்,எம் கே ஷேக்தாவூத், ல .சண்முகம்,தி.ரமேஷ், பி.இளங்கோவன், ஜே.சிந்தனைச் செல்வி, ப.கார்த்திகேயன், சி ராதா கிருஷ்ணன், ஆர் ஸ்டீபன் , ஒ .கருணாநிதி, ம .சின்னசாமி, ஆர் இராகவன் , நல்லப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டு ,அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை , உடனே தமிழக அரசு நிறைவேற்றி தர வலியுறுத்தி பேசினர்.




