• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

முற்பது பாடகர்கள் இணைந்து பாடிய ஜெய்ஸ்ரீராம் பாடல்

Byதன பாலன்

May 21, 2023

“ஆதிபுருஷ்” படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘ஜெய் ஸ்ரீராம்’ பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது.

கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும் அனுபவமாக இருக்கிறது .ஓம் ரவுத் இயக்கத்தில், பூஷன் குமார் தயாரித்து, பிரபாஸ், சைஃப் அலி கான், கீர்த்தி சனோன், சன்னி சிங் மற்றும் தேவதத்தா நாகே உள்ளிட்ட ந்டசத்திர நடிகர்களின் நடிப்பில் ஒரு தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள படம் தான் ஆதிபுருஷ். மயக்கும் மெல்லிசை, ஆச்சர்யமளிக்கும் மாயாஜால காட்சிகள் மற்றும் மனதை மயக்கும் கதைசொல்லலுடன், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ஒரு பாடலை விட அதிகமாக உணர்வை தருகிறது. இது பிரபு ஸ்ரீ ராமின் பெயரை அழைப்பதன் வலிமை மற்றும் மகத்துவத்தை குறிக்கும் ஒரு அற்புதமான பாடலாகும் .

ராகவ்வின் உண்மையான சாராம்சத்தையும் மகிமையையும் வெளிப்படுத்தும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ பாடல், அவரது தெய்வீக சக்தியைப் பற்றிக் கேட்போரைப் பிரமிக்க வைக்கும் வண்ணம் உருவாகியுள்ளது . தெய்வீக குரல் மற்றும் ஆன்மாவைத் தூண்டும் வகையில் உருவாகியிருக்கும், பாடல் ஒரு கலாச்சார நிகழ்வாகவும் மில்லியன் கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளிக்குமாறும் அமைந்துள்ளது. இப்படம் 16 ஜூன் 2023 அன்று உலகளவில் வெளியிடப்படவுள்ளது