• Wed. Jan 21st, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்

ByKalamegam Viswanathan

Jan 30, 2024

பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரா செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், 2003 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்து ஒரு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் ‌.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் 500க்கும் மேற்பட்டோர் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பேருந்து நிலையம் வாயில் முன்பாக 500-க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் பேனரை காவல்துறையினர் அளித்ததாக கூறி, காவல்துறையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இது குறித்து
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அடுத்த கட்டமாக வரும் பிப்ரவரி ஐந்து முதல் ஒன்பது வரை அரசு கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாகவும். பிப்ரவரி 10ஆம் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்த இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிப்ரவரி 15 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும், மேலும், 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து ,பெண்கள் உட்பட்ட 500 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பேருந்து நிலையம் அருகே சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களை, காவல்துறையினர் பேருந்துகளில் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.