• Mon. Jan 20th, 2025

ஜெ. பிறந்த தினம் அன்னதானம்.., முன்னாள் அமைச்சர்…

ByN.Ravi

Mar 4, 2024

மதுரை அருகே, சோழவந்தானில், ஜெயலலிதா பிறந்தநாள் விழா முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார்.
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகம் சார்பில், சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர். பி. உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில், அமைப்புச் செயலாளர் மகேந்திரன், வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார், பேரூர் செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியச் செயலாளர்கள் அரியூர் ராதா
கிருஷ்ணன், காளிதாஸ், எம். வி. பி .ராஜா, பேரூர் செயலாளர் அசோக், மாநில நிர்வாகிகள் துரை தன்ராஜ், திருப்பதி, பூம ராஜா, தமிழழகன், இலக்கிய அணி ரகு,
மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம், கருப்பட்டி தங்கப்பாண்டி, பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன், ரேகா ராமச்சந்திரன், சண்முக பாண்டியராஜா, வசந்தி கணேசன், சரண்யா கண்ணன் , நிர்வாகிகள் தியாகு, தண்டபாணி, பெருமாள், ஜெயபிரகாஷ், துரைக்கண்ணன், மாரி, மகளிர் அணி லட்சுமி வனிதா, குருவித்துறை காசிநாதன், விஜய்பாபு, திருவேடகம் மணி என்ற பெரியசாமி, மன்னாடி மங்கலம் ராஜபாண்டி, விவசாய அணி வாவிடமருதூர் ஆர். பி .குமார், மாவட்ட பிரதிநிதி அலங்கை முரளி, தகவல் தொழில் நுட்ப அணி முருகன், வாடிப்பட்டி ராமசாமி, மேலக்கால் காசிலிங்கம், ராஜபாண்டி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சோழவந்தான் நகர இளைஞரணி செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.