அண்மையில் மதுரை உயர்மறை மாவட்டப் பேராயராக பொறுப்பேற்ற அந்தோனிசாமி சவரிமுத்து அவர்களை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், மூன்று தொகுதிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தேவை என்ற கோரிக்கை வைக்க வேண்டும்.
தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் அது யாரிடம் அடமானத்தில் உள்ளது. தேர்தல் வரும் போது திமுக வேடம் போடுகிறது.

எங்களுக்கு இருப்பது சுதந்திர பசி, என்னுடன் இருப்பவர்கள் என்னிலும் உறுதியானவர்கள் எனவே எங்களுக்கு கூட்டணி தேவை இல்லை. கூட்டணி கட்சி வைத்து எமஎல்ஏ வென்றவர்கள் இது வரை சாதித்தது என்ன? என்று சீமான் கேள்வி
சீட்டுக்கு தான் கட்சி என்றால் கொள்கை எதற்கு. தமிழ்நாட்டில் வடஇந்தியர்கள் வாக்கு சேர்ப்பது குறித்து திமுக விற்கு எந்த கவலையும் இல்லை, அவர்கள் வாக்கை எப்படி பெறவேண்டும் என்று திமுக சிந்திக்கிறது.
வடஇந்தியர்களுக்கு வாக்கு கொடுத்தால் அவர்கள்தான் நாளை தமிழக அரசியலை முடிவு செய்வார்கள். வடஇந்தியர்கள் வாக்கு முழுவதும் பாஜக வாக்கு தான். இது முழுவதும் திட்டமிட்டு செய்யப்படுகிறது. ஒரே நாடு ஒரே ரோடு என்று சொல்கிறார்கள், ஆனால் கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வராது, கேரளாவில் இருந்து தண்ணீர் வராது.
நான் ஆட்சிக்கு வந்தால் வடஇந்தியர்களிடம் நுழைவு சீட்டு கேட்பேன். இந்திய இன்றும் கடன் கார நாடாக இருக்கிறது, ஆனால் இந்தியா வளர்கிறது என்று கூறுகிறார்கள், அதையும் மக்கள் நம்புகிறார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு வந்தால் நல்ல ஆட்சி வரும்.
பிசாசை விவாகரத்து செய்து பேயை திருமணம் செய்வது போல், திமுக வேண்டாம் என்று அதிமுக விற்கும் , அதிமுக வேண்டாம் என்று திமுகவிற்குன் வாக்கு செலுத்துகிறரர்கள். யாரும் திமுக, அதிமுகவிற்கு வாக்கு செலுத்துவது இல்லை.
தவெக ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு இது போல் நிறைய கட்சிகள் வரும் போகும், விஜய்காந்திற்கு இல்லாத எழுச்சியா, கமலஹாசனும் வந்தார் சென்றார். அவ்வளவு தான். திமுக அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அண்ணா வழியில் செல்கிறது, இரண்டும் ஒரே கொள்கை. ஆனால் நான் அண்ணன் வழியில் செல்கிறேன். எங்கள் வழி பிரபாகரன் வழி.
அமெரிக்க அதிபர் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பது வரவேற்கத்தக்கது, எப்போதாவது இந்திய அரசு விழித்துக்கொள்கிறதா என்று பார்ப்போம். எங்களால் ரோடு ஷோ நடத்தமுடியாது, அடுத்தடுத்து நிறைய போராட்டங்கள் நடத்த இருக்கிறோம் என்றார்.