• Wed. Jan 14th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமா? மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரமா?

ByA.Tamilselvan

Apr 25, 2022

தமிழக அரசு சின்னத்தில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தான் என தனது டீவிட்டர் பக்கத்தில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசின் சின்னமாக இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
. இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது. சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1947–1949) இருந்த போது இந்த சின்னத்தை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழ்நாட்டின் அரசு சின்னமாக 1949 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த இலச்சினை மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது. மேலும் தமிழக அரசின் இலச்சினைஆக இருப்பது ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வரும் நிலையில், அதில் இருப்பது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கோபுரம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
எது உண்மை தமிழக அரசின் சின்னத்தில் இருப்பது ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரமா ?அல்லது மதுரைமீனாட்சி அம்மன் கோயில் கோபுரமா ?