• Fri. Apr 26th, 2024

RRRவெளியீடுஅதிர வைக்கும் அரசியல் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தமா?

பாகுபலி1,2 ஆகிய படங்களின் பெரிய வெற்றிக்குப் பின்னர் ராஜமெளலி இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ரத்தம் ரணம் ரெளத்திரம் எனும் ஆர் ஆர் ஆர்.சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப்படம் 800 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன உலகம் முழுவதும் 10000 ம் திரையரங்குகளில் RRR படத்தை திரையிட ஏற்படுநடந்துவரும் இந்த படத்தில்ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., ஆலியா பட் உட்பட பலர் நடித்துள்ளனர்.

ஏற்கெனவே கொரோனா முதல் இரண்டு அலைகளின் தாக்கத்தால் தொடர்ந்து தள்ளிப்போன இந்தப் படம் ஜனவரி 7,2022 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் சில தெலுங்குப் படங்கள் தங்கள் வெளியீட்டு தேதியை மாற்றிக்கொண்டதுதெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் படம் வெளியாகவிருந்ததால் எல்லா மாநிலங்களிலும் படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் படக்குழுவினர் ஈடுபட்டிருந்தனர் இந்திய சினிமாவில் ஒரு திரைப்படத்தை விளம்பரபடுத்துவதற்காக மொழிவாரியாக அந்தந்த மாநில தலைநகரங்களில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தியது கிடையாது ஆனால் RRR படக்குழு இந்தி, தெலுங்கு,மலையாளம்,கன்னடம், தமிழ் என ஐந்து நிகழ்ச்சிகளை நடத்தினார்கள்.

அந்த நிகழ்வில் அந்த மொழி கதாநாயக நடிகர் ஒருவரை கலந்துகொள்ள செய்து கெளரவித்தனர்இந்தியில் சல்மான்கான், தமிழில்சிவகார்த்திகேயன், கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் இளம் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் ஆகியோர் கலந்துகொண்டனர் எல்லா நிகழ்ச்சிகளிலும் ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண், இயக்குநர் ராஜமவுலி மூவரும் கலந்துகொண்டதை இந்திய திரையுலகம் பிரமிப்புடன் பார்த்தது
இப்படி இருக்கையில் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு முக்கியமான நகரங்களில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஜனவரி 1 முதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அவற்றில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


சனவரி 1,2022 அன்று RRR படக்குழுவினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பல மாநிலங்களில் திரையரங்குகள் மூடப்ப ப்படுவதால் இம்முடிவை எடுத்திருக்கிறோம், சரியான நேரத்தில் படத்தை வெளியிடுவோம் என்று அறிவித்துள்ளனர்.திரையரங்குகளில் 50 விழுக்காடு என்கிற அறிவிப்பே படத்தைத் தள்ளி வைக்கக் காரணம் என்று எல்லோரும் ” கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மை வேறு என்கிறது ஆந்திர மாநில அரசியல் வட்டார தகவல்கள்

ஆந்திராவில் திரையரங்கு டிக்கட் விற்பனையை அரசாங்கமே கையில் வைத்துக் கொண்டிருக்கிறது. பிரம்மாண்டமான செலவில் தயாரிக்கப்பட்ட படங்களுக்கு வழக்கம்போல அதிக விலைக்கு டிக்கட்டுகள் விற்பனை செய்ய முடியாத நிலை. இதனால் ஆர் ஆர் ஆர் போன்ற பெரிய செலவில் தயாராகும் படங்கள் ஐம்பது நாட்கள் தாண்டி ஓடினால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் என்கிற சூழல் நிலவுகிறதுRRR படத்தின் 40% முதலீட்டுக்கான வசூல் ஆந்திர மாநிலத்தில் கிடைக்க வேண்டும் அதனால்தான் பெரியபடங்கள்வெளியாகும்போது டிக்கட் விலையை உயர்த்தி விற்க அனுமதிகோரி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன்ரெட்டியை வலியுறுத்திவந்தது தெலுங்குத் திரையுலகம்.2020 ஜூன் 9 ஆம் தேதி, நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்குத் திரைப்பட நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமவுலி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்பட தெலுங்குத் திரையுலகப் பிரமுகர்கள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்தனர்.

அந்தச் சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது. சந்திப்புக்குப் பிறகு நடிகர் சிரஞ்சீவி கூறியதாவது……ஏற்கெனவே தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15 ஆம் தேதிக்குப் பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.கொரோனா வைரஸ் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ள சினிமாவை காப்பாற்ற சில சலுகைகளை முதல்வரிடம் கேட்டிருக்கிறோம். பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது, தியேட்டர்களுக்கு மின் கட்டணச் சலுகை, வரி குறைப்பு, சினிமா கலைஞர்களை உற்சாகப்படுத்த நந்தி விருது வழங்குவது உள்ளிட்ட பலகோரிக்கைகள்வைத்திருக்கிறோம்.என்று கூறியிருந்தார்.


இவற்றில் பெரிய பட்ஜெட் படங்கள் வரும்போது நாங்களே டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்வது என்கிற கோரிக்கையை ஆந்திர முதல்வர் ஒப்புக்கொள்ள அப்போதேமறுத்துவிட்டார்.இதனாலேயே வெளிப்படையாகச் சொல்லாமல் ஆந்திர முதல்வருக்கு எதிராக ஓர் அறிவிக்கப்படாத வேலைநிறுத்தம் போல் பெரிய பட்ஜெட் படங்களை வெளியிடுவதில்லை என்கிற முடிவை ஆந்திரத் திரையுலகம் எடுத்திருப்பதாகவும் அதன் காரணமாகவே ஆர் ஆர் ஆர் திரைப்பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *