• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

கோவை டிரினிட்டி கண் மருத்துவமனையில் காண்டுரா லாசிக் கண் சிகிச்சை கருவி அறிமுகம்

BySeenu

Jul 17, 2024

2024 – ஆன்மாவின் ஜன்னல், உடலில் பொன் நகையாக இருப்பவை கண்கள். கண்பார்வையற்ற ஒருவருக்கு உலகமே இருண்டு விடுகிறது. டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனை, கண் மருத்துவ சேவையில் ஒரு தனிப்பட்ட அர்ப்பணிப்பை கொண்ட புகழ் வாய்ந்ததாக திகழ்ந்து வருகிறது. கண் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்பதை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. திறமை வாய்ந்த கண்சிகிச்சை நிபுணர்கள், அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள், அதிநவீன சிகிச்சைகள் மற்றும் அறுவை சிகிச்சை முறைகளை பின்பற்றி வருகிறது.

கேரளாவை சேர்ந்த இந்த மருத்துவமனை, சமீபத்தில் கோவையில் அடியெடுத்து வைத்தது. இங்கு கண்டுரா லேசிக் கருவியை அறிமுகம் செய்து அடுத்த நிலைக்கு உயர தயாராகியுள்ளது.லாசிக் பார்வை சரி செய்வதில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. காண்டுரா லாசிக், கண்ணாடி அணியாமல் இருக்க பார்வை குறைபாட்டை சரி செய்வதோடு மட்டுமின்றி, கண்விழித்திரையில் உள்ள குறைபாட்டினையும் சரி செய்கிறது. ஸ்மைல் மற்றும் லாசிக் கருவிகளால் அளிக்கப்படும் சிகிச்சைக்கும் மேலாக சிறப்பான பார்வையை தருகிறது. கண் விழித்திரையின் பரப்பளவை முப்பரிமாணத்தில் எடுத்துக்காட்டுகிறது. இந்த சிகிச்சை பெற்றவர்களில் 65 சதவீத நோயாளிகள் 6/6 (20/20 ஏற்றுக் கொள்ளப்பட்ட சாதாரண பார்வை)யை விட நல்ல பார்வையை பெற்றுள்ளனர். மிகவும் துல்லியமான பார்வை கிடைப்பதோடு, லாசிக் சிகிச்சையுடன் தொடர்புடைய வெளிச்ச உணர்வு, இரவுநேரத்தில் வாகனம் ஓட்டுவதில் சிரமம், கண் கூச்சம், ஒளிச்சிதறல் மற்றும் வண்ண வளையங்கள் தோன்றுதல் போன்றவை இந்த சிகிச்சையில் குறைகின்றன.காண்டுரா லாசிக், லேசர் உதவியுடன் பார்வை குறைபாட்டினை சரி செய்யக் கூடியது. விழித்திரையை துல்லியமாக அளவீடு செய்ய நீர் முனை வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. பார்வையை தேவையான அளவிற்கு தனிப்பட்ட வகையில் சரி செய்கிறது.

அமெரிக்காவின் உணவு பாதுகாப்பு அமைப்பான எப்.டி.ஏ., மற்றும் ஐரோப்பிய அமைப்பான சிஇ போன்றவைகளின் கடுமையான நிர்ணயத்தையும் அங்கீகாரத்தையும் இந்த சிகிச்சை முறை கொண்டுள்ளது. துவக்க விழா சலுகையாக 25 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்புகள் இரண்டு, காண்டுரா விஷன் பாதுகாப்பான அறுவை சிகிச்சை என அங்கீகாரம் அளித்துள்ளது. அறிமுக விழாவில், தலைமை விருந்தினராக கோவை தி ஹிண்டு விளம்பரம் மற்றும் விற்பனை பிரிவின் பொது மேலமாளர் ஆர்.சிவக்குமார் பங்கேற்றார். டிரினிட்டி சிறப்பு கண் மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுனில், மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது சபாஜ், இணை இயக்குனர் பிரவீன் தனபால், மருத்துவ செயல் இயக்கனர் டாக்டர் மதுசுதன், முதுநிலை ஆலோசகர் டாக்டர் மும்தாஜ், டாக்டர் அனு பிரீதி ஜெயின், தலைமை செயல் அதிகாரி ஜாஸ்மின், அபக் மீடியா நிர்வாக இயக்குனர் பாலகிருஷ்ணன் சண்முகம், டிரினிட்டி ஹெல்த் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான்சன் விஜய் மாத்யு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.