• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புதிய மின்சார ஸ்கூட்டரான ஆர்பிட்டர் அறிமுகம்..,

BySeenu

Nov 8, 2025

நூற்றாண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை கொண்ட டி.வி.எஸ்.மோட்டார்ஸ் நிறுவனம் , இந்தியாவின் முன்னனி மோட்டார் சைக்கிள் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது…

உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் டி.வி.எஸ்.நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப புதிய வாகனங்களை அறிமுகபடுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது..

இதற்கான அறிமுக விழா கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது..

இதில் டி.வி.எஸ்.மோட்டார் நிறுவனத்தின் இ.வி.வர்த்தக டி.ஜி.எம்.ரிஷு குமார் புதிய ஆர்பிட்டர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகபடுத்தி பேசினார்..

அப்போது பேசிய அவர், ஆர்பிட்டர் இ.வி.மாடல் நீளமான இருக்கைகளுடன் குடும்பத்தினர் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்…

ஒரு முறை சார்ஜ் செய்தால் 158 கிமீ வரை பயணிக்கும் IDC வரம்பு, க்ரூஸ் கண்ட்ரோல், மலைப் பகுதிகளில் பின்னோக்கி நகராமல் பாதுக்காகும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட், 34-லிட்டர் அளவுள்ள விசாலமான பூட்ஸ்பேஸ் மற்றும் பல இணைக்கப்பட்ட நவீன அம்சங்கள் என இரு சக்கர இ.வி.வாகன பிரிவிலேயே முதல் முறையாக பல அதி நவீன தொழில் நுட்ப அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளதாக அவர் தெரிவித்தார்..

எக்ஸ் ஷோரூம் விலையாக ரூபாய் 1,03,100 விலையில்,பல்வேறு அசத்தலான வண்ணங்களில் கிடைக்கும் வகையில் இதனை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்தார்..