புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக ஸ்ரீ மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் பணி ஏற்பு விழா சங்கத் தலைவர் AR.முகமது அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.

தலைவராக V.ஹேமரிஷி, செயலாளராக S.ராகவன், பொருளாளராக M.காந்திமதி மற்றும் உறுப்பினர்கள் சுமார் 23 பேருக்கு ரோட்டரி மாவட்டம் 3000 இளைஞர் சேவை மாவட்ட செயலாளர் V.நாகராஜன் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியேற்பு விழா செய்து வைத்து சிறப்புரை வழங்கினார்.

முன்னதாக வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைவர் MA.முருகப்பன் வரவேற்றார் நிகழ்ச்சியில் துணை ஆளுநர் B.அசோகன், செமினார் சேர்மன் S.அழகப்பன் புதுக்கோட்டை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் D.செல்வி புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் துரைமணி T.தயாளன் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியினை பொருளாளர் கண.மோகன்ராஜா தொகுத்து வழங்கினார் நிறைவாக செயலாளர் R.சங்கர் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது
