• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி..,

BySeenu

Nov 29, 2025

குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதனை 12 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மீதான சந்தேகங்களை முன்னிட்டு பாராளுமன்றத்தில் விவாதம் தீவிரமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

SIR பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யும் சூழல் கூட உருவாகியிருப்பது மிக கவலைக்குரிய நிலை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதே நேரத்தில் ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை உறுதி செய்ய இந்திய அரசு, இலங்கை அரசின் மீது அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம் எனவும் திருமாவளவன் வலியுறுத்தினார். SIR நடைமுறையில் உண்மையான பூர்வ குடிகளின் வாக்குகள் நீக்கப்படும் அபாயம் நிலவுகிறது என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார்.

கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தனது கட்சி வலியுறுத்தி குரல் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தகவல் தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், செங்கோட்டையன் அதிமுகவில் மூத்த தலைவர் என்றாலும் தற்போதைய அதிமுக சூழலில் அவரது நிலை அந்தக் கட்சிக்கு சாதகமானதல்ல என்றார். த.வெ.க.வில் செங்கோட்டையன் இணைந்தது அவரது சொந்த விருப்பமே எனவும் அவர் கூறினார்.

பாஜகவால் அதிமுக உறுப்பினர்களை தக்க வைத்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; செங்கோட்டையன் தி.வெ.க.வுக்கு சென்றது பாஜக நடத்திய “சித்து விளையாட்டின்” விளைவு எனவும் திருமாவளவன் குற்றஞ்சாட்டினார்.