• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

கோவையில் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி…

BySeenu

Oct 19, 2024

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் தனக்கு ஒப்புதல் கிடையாது என்று கூறியுள்ள தமிழிசை சௌந்தராஜன், உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்து காட்ட முயல்வதாகவும், தெரியாமல் செய்த தவறை பெரிதாக்கி எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கும் இந்த இரட்டை வேடத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன்..,

விமானத்தில் நான் வந்த ஒரு மணி நேரத்திற்குள் முதல்வல் ஏதாவது டிவிட் போட்டு இருக்கின்றாரா? என நகைப்புடன் கேள்வியெழுப்பியபடியே தமிழுக்கு இவர்கள் மட்டுமே உரிமையானவர்கள் என்பது போல பேசுகின்றனர் எனவும் பா.ஜ.கவினர் தமிழ் பற்று இல்லலாதவர்கள் என காட்ட முயல்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார். இதற்கான வெளிப்பாடுதான் பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியது என்றும் ஏதாவது ஒரு காரணம் கிடைக்குமா என முதல்வர் பார்த்துக்கொண்டு இருக்கின்றார் என்றும் தமிழை சொல்லி மக்களை ஏமாற்றினோம். இனிமேலும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் அவர்கள் எண்ணம் என்றும் விமர்சித்தார். இன்னொரு மொழியை சொல்லி தமிழை யாரும் சிறுமைபடுத்த முடியாது எனவும் மொழி அரசியலை இனிமேலாவது திமுக கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.மேலும் முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் முன்பாக இந்தி தினத்தை வாழ்த்தி பேசி விட்டு, இப்போது இந்தியை எதிர்த்து பேசுகின்றார் என்றும், தமிழகத்தில் தமிழில் மாணவர்கள் முழுமையாக பேசுவது இல்லை என்றும், கூறியதுடன் இந்தியை எதிர்த்து விட்டு பள்ளி கல்வித்துறை அமைச்சர் உருது மொழியில் எழுதுகின்றார் இது மும்மொழியா?நான்கு மொழியா என்பதை அன்பில் மகேஷ் பொய்யா மொழி விளக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் தம்பி உதயநிதி தவறுகளை திருத்த திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மகிழ்ச்சிதான் என்றும் குறிப்பிட்டார். கோவையில் தொடர்ந்து வெடி குண்டு புரளி வந்து கொண்டு இருக்கின்ற சூழலில் இது போன்ற புரளிகளை காவல்துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், பள்ளிகளுக்கான இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளிகள் சற்று கவலை அளிப்பதாக இருக்கின்றது என்பதால் காவல் துறை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றார். வடமாநிலத்தவர்கள் தமிழ் படிக்கின்றனர் ஆனால் இங்கு ஏன் தடுக்கின்றனர் என்றும் வளரும் குழந்தைகளுக்கு மொழிகளை கிரகித்து கொள்ளும் தன்மை இருக்கின்றது அதனை தடுக்க கூடாது என்றும் கூறிய அவர், நெல்லை நீட் பயிற்சி மையத்தில் நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும் இதற்காக நீட் தேர்வை குறைசொல்ல முடியாது என்றும் தெரிவித்தார். நீட் பயிற்சி மையங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் நீட் மையம் செல்லாமலேயே மாணவர்கள் தேர்வாகி இருக்கின்றனர் என்றும் மேற்கோள் காட்டினார். சென்னையில் ஏதோ சிறிய மழைக்கு செய்த பணிகளை பெரிதாக பேசுவதாகவும் அவர் விமர்சனம் செய்தார்.மேலும் தீபாவளிக்கு மறுதினம் விடுமுறை விட்டது வரவேற்க தக்கது என கூறிய தமிழிசை பவன் கல்யாண் சொன்னது போல சனாதானத்தை எதிர்த்தவர்கள் காணாமல் போவார்கள் என்பதால் இந்து பய பக்தியோடு இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆளுநர்களுடன்,
முதலமைச்சர்கள் இணைக்கமான சூழ்நிலையினை கொண்டு வர வேண்டும் எனவும் நேற்றைய விவகாரத்தில் தமிழக ஆளுநரை அழைத்து என்ன பிரச்சினை என முதல்வர் கேட்டு இருந்தால் எளிதாக இந்த பிரச்சினை முடிந்து இருக்கும் என்றும் சுட்டிக்காட்டிய தமிழிசை,பதவிக்கு ஏற்றபடியான உடையினை அதற்கு ஏற்றபடி அணிவதுதான் சரியாக இருக்கும் எனவும் கூறினார்.

இந்திக்கு ஆதரவாக பேசுவதால் என்னை கூட இந்தி இசை என விமர்சிக்கின்றனர் எனவும், தமிழ் எனது பெயரில் மட்டுமல்லாது உயிரிலும் இருக்கின்றது எனவும்
திமுகவை சேர்ந்த எத்தனை பேரின் குழந்தைகள் தமிழை படிக்கின்றனர் என கேள்வி எழுப்பியதுடன் தமிழ் தாய் வாரம் கொண்டாடப்பட வேண்டும் என்றும் தமிழ்தாய் வாழ்த்து பாடலில் வரிகள் விடுபட்டதில் தனக்கு ஒப்புதல் கிடையாது என்றும் கூறினார். இதேபோல் உள்நோக்கம் இல்லாத ஒன்றை உள்நோக்கத்துடன் செய்ததாக காட்ட முயல்வதாகவும் தெரியாமல் செய்த தவறை பெரிதாக்குகின்றனர்,
எதையாவது பூதாகரமாக செய்து அரசியல் செய்ய பார்க்கும் நிலையில் இந்த இரட்டை வேடத்தை கண்டிக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.