நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது சூட்டிங் போல் நடைபெற்றதாகவும் பாவங்கள் அனைத்தும் விஜயை சேரும் எனவும், விஜய்க்கு தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதாகவும் அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும் நாகூரில் இப்தார் நோன்பு திறந்த நடிகர் பஷீர் பேட்டி அளித்துள்ளார்.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமியர்கள் தினமும் நோன்பு நோற்று இறைவனுக்கு தங்களுடைய பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவில் தேசிய தலைவர் முத்துராமலிங்க தேவர் திரைப்படத்தின் நடிகர் பஷீர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.


அவரின் தேசிய தலைவர் திரைப்படம் வெற்றி பெறவும், நாகூர் ஆண்டவர் சமாதியில் விளக்கு ஒளி ஏற்றி தொழுகையில் ஈடுபட்டார். ஆண்டவர் சன்னிதானத்தில் தர்கா அரசியல் குழு தலைவர் செய்யது காமில் சாகிப் மற்றும் பத்திரிகையாளர்களுடன் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நோன்பு திறந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பஷீர் கூறியதாவது..,
நடிகர் விஜய் இப்தார் விழா கொண்டாடியது சூட்டிங் போல் நடைபெற்றதாகவும் பாவங்கள் அனைத்தும் விஜயை சேரும் எனவும் விஜய்க்கு தவறாக வழிநடத்தப் பட்டுள்ளதாகவும் அவர் பாவங்களில் இருந்து விடுபட வேண்டும் எனவும், கூறியவர் சினிமா திரைப்படங்கள் எடுப்பதில் திமுகவின் தலையீடு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.