• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் தி.மு.க சார்பில் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கான நேர்காணல்..!

தென்காசியில், தி.மு.க சார்பில் நகராட்சி வார்டு கவுன்சிலருக்கான நேர்காணல் நடைபெற்றது.
தென்காசி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் இன்று காலை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேர்காணல் நடத்தினார். தி.மு.க நகர செயலாளர் சாதிர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கோமதிநாயகம் மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆயான்நடராஜன், நகர கலை இலக்கிய அணி ராமராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சுப்பையா, மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமித்துரை உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.