அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாஜ், ஐ.பி.எஸ். அவர்கள் உத்தரவின் பேரில் ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.இரவிசக்கரவர்த்தி, அவர்களின் வழிகாட்டுதலின்படி ஜெயங்கொண்டம் போக்குவரத்து ஆய்வாளர் எஸ்.மதிவாணன், அவர்கள் தலைமையில் சர்வதேச “போதை பொருள் ஒழிப்பு” தின நாள் முன்னிட்டு விழிப்புணர்வு பயிற்சி நிகழ்ச்சி, எம்.ஆர்.அரங்கத்தில் நடைபெற்றது. மீனாட்சி இராமசாமி கல்லூரி
தாளாளர், வழக்கறிஞர் எம்.ஆர்.ரகுதாதன், கல்லூரி நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், ஆகியோர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் முதல்வர் சிவசங்கர், அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து போக்குவரத்து ஆய்வாளர் மதிவாணன், அவர்கள் கல்லூரி
மாணவர்களுக்கு “சர்வதேச போதை பொருள் ஒழிப்பு” தின நாளில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செய்தியுடன், சாலை பாதுகாப்பு தொடர்பான “விழிப்புணர்வு, பயிற்சி” அளித்தார்.
அதன்பிறகு சாலையில் “போதை பொருள் ஒழிப்பு மற்றும் சாலை பாதுகாப்பு” விழிப்புணர்வு, பதாகைகள் கையில் ஏந்தி முறையாக தலைக்கவசம் அணிந்தும் சீட் பெல்ட் போட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு கல்லூரி தாளாளர், எழுதிய விழிப்புணர்வு கவிதை, திருக்குறள், புத்தகத்தை பரிசாக கொடுக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக கல்லூரி துறை தலைவர் திருமதி.எழிலரசி, நன்றி கூறினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை துறை பேராசிரியர்கள், பணியாளர்களுடன் ஒருங்கிணைந்து PD குணா, ஏற்பாடுகளை செய்தார்.