ரோகிணி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு புதிய திசைகாட்டியாக, பள்ளி படிப்பை முடித்து கல்லூரி கல்வியில் அடி எடுத்துள்ள மாணவர்களுக்கு.
கன்னியாகுமரியை அடுத்துள்ள பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் கல்லூரியில், அந்த கல்லூரியில் உள்ள பத்து துறை சார்ந்த பிரிவுகளில் பயிலும் மாணவர்களுக்கு ,10 நாட்கள் பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் வழி காட்டும் தகவல்கள் என்பது.

இன்றைய கல்வி நாளைய நல்வாழ்விற்கு திசை காட்டியாக, அஸ்திவாரமாக அமையும் என்ற வழி காட்டும் உரைகள் பற்றி அரங்கில், சமூகத்தில் கல்வி என்னும் விளக்கின் துணையோடு, சிந்தனை என்னும் ஆற்றலால் சரியான தீர்வை எப்படி எடுக்கலாம் என கருத்துடன் கூடிய சிந்தனை விதைகளை முதலாமாண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் பத்திரிகை துறை பணி எத்தனை சவாலானது, தினம் எதிர் நீச்சல் என்ற நிலையில் செய்தி சேகரிக்கப்பட்டு, சமூகத்தின் கண்கள் முன்பு வைக்கிறோம் என்று, தமிழகத்தின் மூத்த முன்னோடி பத்திரிகை உலகில் இந்து குழுமம் தினசரியில், ஆனந்த விகடன் குழுமத்தின்”ஜூனியர் விகடன்” இதழில் செய்தியாளராக பணியாற்றிய சுவாமி நாதன், மாணவர்களிடம் திட்டம் இடுதல், நாம் வாழ்கிற சமுகத்தில் ஒரு தனி மனிதனின் வெற்றிக்கு முதல் கருவியாக அமைவது நாம் கற்கும் கல்வி. இன்றைய நவீன விஞ்ஞான வளர்ர்ச்சியில், எதை ஏற்பது, எதை தவிர்ப்பது என்ற முடிவை எடுக்க வழிகாட்டுவது நாம் கற்கும் கல்வி தான்.

இன்று சமூகத்தின் ஏராளமான வேலை வாய்ப்புகள் குவிந்து கிடப்பதை பற்றியும், இன்றும் உலகநாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

வெற்றி பெற்ற மனிதர்கள் இளமை காலத்தில் அவர்களது பெற்றோர்களின் வருமை நிலையிலும், கொண்ட லட்சியத்தை ஒரு பொழுதும் தடம் மாறாமல் வெற்றி பெற்றவர்களை, ஆசிரியர் தினமான இன்று (செப்டம்பர்)5ம் இங்கு கூடி அலசுவதே ஒரு நல்ல சூழல். பெற்றோர்களுக்கு அடுத்து, ஒவ்வொரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இருக்கும் உறவு என்பது அற்புதமானது. இன்று முன்னாள் இந்திய ஜனாதிபதி முனைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் மட்டும் அல்ல, இந்திய சுதந்திர வேள்வியில், வெள்ளையர்களுக்கு எதிராக சுதேசி கப்பல் ஓட்டிய முதல் தமிழன் கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனார் மற்றும் அன்னிய நாட்டில் பிறந்தாலும் இந்தியாவில் சமுக சேவை செய்த அன்னை தெரேசா வின் பிறந்த நாட்களை கொண்டாடுவது. அதுவும் நாளைய தலைவர்களான இன்றைய மாணவ சமூகத்தின் முன் மறைந்தும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மூவரையும் நாம் இன்று நினைத்து பார்க்கும் தினமாக செப்டம்பர் 5 _ம் நாள் இயல்பாக அமைந்துள்ளது என அவரது உரையில் தெரிவித்தார்.

