• Thu. Dec 12th, 2024

ஊரடங்கில் அலட்சியம் – சமூக ஆர்வலர்கள் வேதனை

Byஜெபராஜ்

Jan 9, 2022

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல்வர் பொறுப்பேற்ற பின்பு முதன் முதலாக கொரோனா தொற்றின் மூன்றாவது அலையின் காரணமாக தமிழகம் முழுவதும், ஞாயிற்றுகிழமை முழு அடைப்பு அறிவித்திருந்தார் அதில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கொல்லம் திருமங்கலம் சாலையில் வாகனங்களில் வருவோரை மட்டுமே மரித்து எங்கு செல்கிறீர்கள் என்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் ஊரடங்கிலும் பொதுமக்கள் தெருக்களில் மாஸ்க் அணியாமல் சுற்றி திரிவதை காண முடிந்தது.

அரசு அறிவித்த சட்ட விதிகளை மதிக்காமல் சென்றதால் வேகமாக பரவி வரும் மூன்றாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும், கொரோனா தொற்று பரவும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனாவின் முதல்அலையில் அதிகமாக பாதிக்கப்பட்டது புளியங்குடி மட்டுமே! எனவே மாவட்ட நிர்வாகம் புளியங்குடியில் தனி கவனம் செலுத்தி நோய்த்தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.