குமரி கோட்டார் மறைக்கப்பட்டப் ஆயர் மேதகு முனைவர் நசரேன் சூசை
செய்தியாளர்களிடம் தெரிவித்தது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் திருத்தந்தை பெனடிக்ஸ்.2012_ம் ஆண்டு டிசம்பர் 2_ம்தேதி. மறைசாட்சி தேவசகாயத்தை அருளாளராக அறிவித்த விழா நாகர்கோவில் கார்மல் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 2022 மே15_ ம் நாளில் ரோமில் வைத்து நடந்த ஆடம்பரமான
பெருவிழாவில். திருத்தந்தை பிரான்சிஸ் தேவசகாயத்தை ‘புனிதர்’ நிலைக்கு உயர்த்தினார். இந்த நிகழ்வு நமக்கு மட்டுமல்ல. உலக திரு அவைக்கு மிக மகத்தான பெருமையான விழாவாக அமைந்தது.
அதற்கான நன்றி திருப்பலி இதே தேவசகாயம் மவுண்ட் காற்றுடி மலையில்
2022 ஜுன் 5_ல் நடைபெற்றது.

இந்த மகிழ்வின் நிலையிலே, மற்றொரு மாபெரும் நற் செய்தியாக. மறைசாட்சி புனித
தேவசகாயத்தை திருத்தந்தை 14_ம் லியோ கடந்த ஆண்டு ஜுலை திங்களில் 16_ம் நாளில். இந்திய நாட்டின் அனைத்து பொது நிலையரின் பாதுகாவலர் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு கண்டு. கோட்டார் மறைமாவட்டம், குழித்துறை மறைமாவட்டம் மட்டுமே அல்லாது. தமிழ் நாடு, இந்தியாவுக்கு ஒரு மகாத்தான பெருமிதமாக உணரும் தருணமாக யாவரும் உணர்கிறோம்.
திருத்தந்தை லியோவின் அறிவிப்பை. குமரி மாவட்டம் கொண்டாடி மகிழ்ந்து வரவேற்பதின் அடையாள விழாவாக கிறிஸ்த்தவ சமுதாய மக்களுக்கு மட்டும் அல்ல. அனைத்து மக்களும் இன பேதமின்றி அனைத்து சமய மக்களின் சமத்துவ விழாவாக. மறைசாட்சியை அன்றைய திருவிதாங்கூர் அரசின் படை கொலை செய்த இடமான காற்றாடி மலையின் அடிவாரத்தில் எதிர் வரும் 14_கம் நாள் புனித தேவசகாயம் மவுண்டில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மேதகு பேராயர் லியோபோல்டே ஜிரெல்லி(திருத்தந்தையின் அரசு தூதுவர் இந்தியா மற்றும் நோபாளம்) மேதகு ஜார்ஜ் அந்தோணி சாமி
(சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர்) மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட்( பாண்டிச்சேரி- கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர்)n மேதகு ஆன்றனிசாமி
சவரிமுத்து(மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர்) மேதகு யூஜின் ஜோசப் (வாரணாசி மறைமாவட்ட ஆயர். இந்திய ஆயர் பேரவைப் பொதுநிலையினர் பணிக்குழு தலைவர்)
மேதகு பேராயர் லியோபோல்டோ ஜிரெல்லி( திருத்தந்தையின் அரசு தூதுவர் இந்தியா மற்றும் நோபாளம்) தேவசகாயம் அருள் வாழ்வு இயக்கம் மேதகு ஆன்றனிசாமி
சவரிமுத்து.( மதுரை உயர் மறைமாவட்டப் பேராயர். ஆகியோர் பங்கேற்றுக் கொண்டாடும் இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்திலும் இறைமக்களுடன்.
அனைத்து சமுதாய மக்களும் எவ்விதமான வேற்றுமையும் இன்றி காற்றாடி மலை நிழலின் நமது மண்ணைச் சேர்ந்தவர் தேவசகாயம் என்ற உணர்வுடன். ஜனவரி 14 -ம் நாள் மாலையில் ஒன்று கூடுவோம், மகிழ்வோம், புனிதர் தேவசகாயம் அருளைப் பெறுவோம் என குமரி கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அழைக்கின்றேன்
என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் அருட்பணி லியோன் கென்சன், கோட்டாறு மறைமாவட்ட செயலர் கிளாட்ஸ்டன், பொறுப்பாளர் பிரான்சிஸ் சேவியர்,
மறைமாவட்ட ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் ஆகியோர் உடன் இருந்தனர்.




