தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மதுரை மாவட்டம் ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், நீலாவதி டிரஸ்ட் சார்பிலும், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா தலைமையிலும், நடிகர் மீசை மனோகரன், நடிகர் அப்பா பாலாஜி, நடிகர் மீசை அழகப்பன், எழுத்தாளர் விவேக் ராஜ், எழுத்தாளர் விமல் ஆகியோர் முன்னணியில் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தேசிய கொடியை ஏற்றினார்.

விழாவில் நடிகர்கள், நடிகைகள், குழந்தை நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள், தேநீர் வழங்கப்பட்டது. ஏழை, எளியவர்களுக்கு 105 நபர்களுக்கு இனிப்பு, இட்லி, வாட்டர் பாட்டில் வழங்கப்பட்டது.