அரியலூர் மாவட்டம் வரதராஜன் பேட்டை பேரூராட்சியில், ரூ 2.50 கோடி மதிப்பீட்டில் ஏழு சாலைகள் பலப்படுத்தும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றதொகுதி, வரதராஜன் பேட்டையில், TURIP திட்டம் 2025 -2026 ன் கீழ், ரூ 2.50 கோடி மதிப்பீட்டில், ஏழு சாலைகளை பலப்படுத்தும் பணி தொடக்க விழாவில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பங்கேற்று, பணியினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலர் முகமதுரபீக், பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், துணைத்தலைவர் எட்வின் ஆர்த்தர், சாலை ஆய்வாளர் சுவேதா, ஆண்டிமடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் ரெங்க முருகன், பேரூர் கழக செயலாளர் அல்போன்ஸ் மற்றும் அரசு அலுவலர்கள், பேரூராட்சி உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






