• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா..!

BySeenu

Jan 10, 2024

கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
பின்னர் நிகழ்வு மேடையில் பேசியதாவது..,
ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திர கல்வி நிறுவனங்களின் அவசியம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொழில் நகரமான கோவை, கல்வி, மரியாதை, பண்பில் மேலோங்கிய நகரம் என்றும், இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் அதற்கு கூடுதல் பலத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.
ஜனநாயகம் என்பது அனைவருக்குமான சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வளர்ச்சி என்பது பொருளாதாரம் ரீதியாக மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியாக இருக்க வேண்டும் என்றும், தரமான கல்வி, ஜனநாயகத்திற்கு வழிவகுக்கிறதா? ஜனநாயகம் தரமான கல்வியை வழங்குகிறதா என்ற விவாதம் இருந்தபோது, 1990, 2000 காலக்கட்டத்தில் கல்வியின் தரம் குறைந்ததால் பொருளாதார மந்தநிலை வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.


தற்போது அந்த நிலை மாறி தரமான கல்வியே பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி நீதித்துறை, ஊடகங்கள் எதுவா இருந்தாலும் ஜனநாயகம் என்பதற்கு இதுபோன்ற சுதந்திர கல்வி நிறுவனங்கள் அவசியமாகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்களின் ஒரு பிராந்திய அலுவலகமும், 3 கிளை அலுவலகங்களும் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த புதிய அலுவலகம் கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சி.எஸ்., பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.