அரியலூர் மாவட்டம்,திருமானூர் ஒன்றியம்,வாரணவாசி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில், அரங்க மேடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி யினை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு .சின்னப்பா, தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பொய்யாமொழி,ஊராட்சி ஒன்றியபொறியாளர் ஜெயலட்சுமி,திருமானூர் மத்திய ஒன்றிய திமுக துணை செயலாளர் தமிழரசி சுந்தர், வாரணாசி சமத்துவபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கமலம், உதவி தலைமை ஆசிரியர் ஜி ரெங்கமணி , ஆங்கில ஆசிரியர் ஆஸ்டின் டேவிட் மற்றும் ஆசிரியை , ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

முன்னதாக கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்பு , அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரு5 லட்சம் மதிப்பிட்டில் நுழைவு வாயில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சியினை, சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் செ.மணிவண்ணன், துணை முதல்வர் அப்பூதியடிகள், திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி) பொய்யாமொழி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திரிசங்கு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.