• Sat. May 11th, 2024

பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி..!

BySeenu

Oct 22, 2023

உணவகம் மற்றும் உணவு பொருட்கள் சார்ந்த கடைகளில் பூச்சி மற்றும் ஈக்களை உயிரிழக்க செய்யும் இயந்திரங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் வரைமுறை படுத்த பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் எனும் அமைப்பின் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

உணவகம், உணவு பொருட்கள், கட்டுமானம், விடுதி மற்றும் கேட்டரிங், சார்ந்த பல்வேறு இடங்களில் பூச்சி மற்றும் ஈக்களை உயிரிழக்க செய்யும் இயந்திரங்களை தாயாரிக்கும் நிறுவனங்கள் வரைமுறை படுத்தாமல், கடத்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது, இந்த நிறுவனங்களை அரசு ஒழுங்கு படுத்த பாய்சன் லைசென்ஸ் என்ற ஒன்றை வழங்கி வருகின்றது, இவற்றை எடுத்து நிறுவனங்களை ஒழுங்கு படுத்தி செய்யும் நிறுவனங்களை ஒன்றினைத்து செயல்படும் வகையில், பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளதாகவும், இச்சங்கத்தின் மூலமாக பாய்சன் உரிமம் இல்லாமல் இயங்கும் நிறுவனங்களை கன்டறிந்து, அவர்களுக்கு உரிமம் எடுக்கவும், அதற்கான படிப்புகளை படிக்க அறிவுறுத்த உள்ளதாக கூறினார், மேலுல் இந்த நிகழ்வில் வாயிலாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்த அமைப்பின் துணை தலைவர் தினேஷ் குமார் கூறும் பொழுது, இந்த அமைப்பை உருவாக்கியதன் நோக்கம், இந்த இத்துறையில் உரிமம் இல்லாமல் பலரும் ரசாயன கலவைகளை உணவு கூடங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட இடங்களில் சிறு பூச்சிகள் வண்டுகளை கொள்ள மருந்துகளை தெளித்து விடுகின்றனர், இது தவிர்க்க பட வேண்டிய ஒன்று இவற்றை கலையும் நோக்கில் உருவாக்க பட்டுள்ளது என்றார் இந்த நிகழ்வில் பெஸ்ட் கன்ட்ரோல் ப்ரொபனல் அசோசியேசன் அமைப்பின் தலைவர் சரவணன், துணை தலைவர் தினேஷ் குமார், செயளாலர் ரோவர், நிர்வாக குழு உறுப்பினர்கள் அருண் பிரசாத், பிரவீன் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *