அரியலூர் மண்டலத்தில் நடந்த தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் எம்பிளாயிஸ் யூனியன் அங்கீகார தேர்தலில் தொமுச பதிவான 213 வாக்குகளில் (51சதவீதம்) 118வாக்குகள் வெற்றி பெற்றது.

அரியலூர் பல்துறை வளாகத்திலுள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக மண்டல அலுவலகத்தில் தொழிற் சங்கங் களின் அங்கீகாரத்திற்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை நடந்த வாக்கு பதிவிற்கு உதவி தேர்தல் அலுவலராக எஸ் சரவணன், வாக்குச்சாவடி தலைமை அலுவலராக பாரி ,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அரியலூர் மண்டல மேலாளர் ராஜா மேற்பார்வையாளராகவும், வாக்குச்சாவடி அலுவலர்களாக பி.எஸ்.சுமிதா,சசிகுமார், லெனின் ஜீவா உள்ளிட்டோர் செயல்பட்டனர். இதில் திமுக ,அதிமுக ஐஎன்டியூசி, பிஜேபி உள்ளிட்ட 8 கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகள் போட்டியிட்டன. காலை 8 மணி முதல் மாலை 6 வரை வாக்கு பதிவு நடைபெற்றது,வாக்கு பதிவுக்கு பின் நேற்று மாலை நடந்த வாக்கு எண்ணும் பணி தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது. அதில் தொழிலாளர் முன்னேற்ற சங்கமானது மொத்தம் பதிவான 213 வாக்குகளில், 118 வாக்குகள் , அதாவது 51% சதவீதம் பெற்று, இதர 7 கட்சிகளின் தொழிற் சங்கங்களை விட முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து டிஎன்சிஎஸ்சி தொமுச அரியலூர் மண்டல தலைவர் எஸ் நாராயணன், தலைமையில், டி என்சிஎஸ்சி மண்டல செயலாளர் அய்யாதுரை, பொருளாளர் டி. ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில், எஸ். பாண்டியன், டபிள்யூ சார்லி சாப்ளின், டி வினோத்ராஜ்,விமலநாதன், எம் பாஸ்கர் கே. விஜயகுமார், ஆர் ரமேஷ், வி. முனியமுத்து, சண்முகநாதன் விஸ்வநாதன், பழனிராஜ், குமரவேல் , சிவா ,உள்ளிட்ட தொமுச நிர்வாகிகள், சங்கத்தின் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்து, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண் டாடினர்.





