• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

போக்சோ வழக்கில் கைதான உடற்கல்வி ஆசிரியருக்கு ஆதரவாக..,மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..!

BySeenu

Dec 7, 2023

போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர்- ஆசிரியருக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாணவர்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆலாந்துறை அரசு மேல் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தவர் கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த ஆனந்தகுமார். இவர் திருமணம் ஆகாதவர். இவர் மீது அப்பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் பாலியல் சீண்டல் புகார் கொடுத்ததன் பேரில் ஆசிரியர் ஆனந்த குமாரை பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அப்பள்ளியில் பயிலும் சக மாணவர்கள் உடல் கல்வி ஆசிரியர் நல்லவர் என்றும், அவர் தவறானவர் இல்லை எனவும் அந்த மாணவி பொய்ப் புகார் கூறி ஆசிரியரை கைது செய்து சிறையில் அடைக்க வைத்ததாக கூறியும் எனவே அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.