குமரி மாவட்டத்தில் ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைக்க 9 ஒன்றியங்களில் போராட்டம் காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கொட்டாரம் அருகேயுள்ள மிஷன் காம்பவுண்ட் பகுதியில். சாமிதோப்பு, கருப்பாட்டூர், நல்லூர்,இரவிபுதூர், இராமபுரம்,லீபுரம், கோவளம், ஊராட்சிகளை அருகில் உள்ள பேரூராட்சியுடன் இணைக்கும் தமிழக அரசின் திட்டத்தினை கை விடுமாறு வலியுறுத்தி தர்ணா போராட்டம் காலை 10_மணி முதல்,மாலை 5மணி வரை நடைபெற்றது.
ஒலிபெருக்கி அனுமதியை முறையாக பெற்றிருந்தும். காவல்துறை ஒலி பெருக்கியை பயன் படுத்தக் கூடாது என தடை விதித்தால். ஒலி வாங்கி இல்லாமலே அரசி செயலுக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளுடன் இணைத்தால். ஊராட்சிகளில் நடக்கும் 100_நாள் வேலை திட்டம் நிறுத்த படும். இது மட்டும் அல்லாது சாதாரண, அன்றாட கூலி வேலை செய்வோர் குடி இருக்கும் வீடுகளின் வரி, குடிநீர் கட்டண, மின்சார கட்டணம் உயர்வதற்கும் வழி வகுக்கும் எனவே தமிழக அரசு இந்த திட்டத்தை கை விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தமிழ் நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
காலை முதல் மாலை வரை நடைபெற்ற தர்ணா போராட்டத்தில், மதிவாணன், சுடலையாண்டி, தி மு கவை சேர்ந்த தங்கமலர், ஜெயகுமாரி, தேவி, இந்திரா, நிலா, ஸ்டெனி ஆகியோர் பங்கேற்றனர்.
