மதுரை மாநகராட்சி பள்ளிகளில் கல்வியுடன் விளையாட்டிலும் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என மேயர் இந்திராணி பொன்வசந்த் பேசினார்.
மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்ற ஆண்டு விழாவில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார்கள்.
இந்நிகழ்வில், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் முன்னிலை வகித்தார்.
மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் பள்ளி, வெள்ளிவீதியார் மாநகராட்சி பெண்கள் பள்ளி மற்றும் இளங்கோ மாநகராட்சி பள்ளியில் ஆகிய பள்ளிகளில் ஆண்டு விழாவினை, மேயர் தொடங்கி வைத்தார். இவ்விழாவில் ,
தமிழக பள்ளிக்கல்வித் துறை நடத்திய கலைத் திருவிழா மற்றும் விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், 2022-23 ஆம் ஆண்டு 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், கலை, இலக்கியம் மற்றும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 240 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை, மேயர் வழங்கினார்கள்.

வெள்ளி வீதியார் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவிகள் மாநில அளவில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாம் இடம் பெற்ற மாணவி ஆர்.லனிகா, பள்ளிக்கல்வித் துறையில் சரர்பில் மாநில அளவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்குபெற்று மூன்றாம் இடம் பெற்ற மாணவி எஸ்.ஸ்ரீவித்யா தேவி மாணவிகளை, மேயர் பாராட்டி பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற தந்த ஆசிரியர்களை பாராட்டி விருதுகளும் வழங்கப்பட்டது. ஆண்டு விழாவில், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கும் , மேயர் பரிசுகளும் வழங்கினார். மாணவ, மாணவிகள் கல்வியில் ஆர்வமுடனும், கவனத்துடனும் பயில வேண்டும், கல்வி மட்டுமே ஒருவரை வாழ்வில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மேலும் பள்ளிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள், கட்டுரைப்பேட்டி, பேச்சுப்போட்டி, ஓவியபோட்டி மற்றும் இதர அனைத்து விளையாட்டு போட்டிகளிலும் மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என மேயர் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, உதவி ஆணையாளர் கோபு, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப் பொறியாளர் கருப்பையா, சுகாதார ஆய்வாளர் கவிதா, மாமன்ற உறுப்பினர்கள் ஜென்னியம்மாள், வசந்தா தேவி. தலைமை ஆசிரியர்கள்
சேகர், அய்யர், உமா மகேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழுத்தலைவர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
