• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கடினமாக உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும் – சென்னை உயர்நீதி மன்ற முன்னால் நீதிபதி ராஜேஷ்வரன் பேச்சு…

BySeenu

Aug 15, 2024

தி வீக்கெண்ட் லீடர் (The weekend Leader) செய்தி நிறுவனம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக சூப்பர் ஸ்டார்ட் அப் மற்றும் சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கும் விழாவில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

தி வீக்கெண்ட் லீடர் (The weekend Leader) செய்தி நிறுவனம் மற்றும் இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து சிறந்த தொழில் முனைவோர் மற்றும் சூப்பர் ஸ்டார்ட் அப் விருது போன்ற விருதுகள் வழங்கும் விழா இரத்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ள இரத்தினம் கிரேண்ட் ஹாலில் நடைபெற்றது.

இரத்தினம் கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர்.மதன்.அ.செந்தில் தலைமையில் நடைபெற்ற இதில், தி வீக்கெண்ட் லீடர் செய்தி நிறுவனத்தின் எடிட்டர் வினோஜ் குமார் கலந்து கொண்டார்.

இரத்தினம் கல்வி குழுமத்தின் இயக்குநர் சீமா செந்தில் முன்னிலை வகித்தார். செயலாளர் மற்றும் கல்லூரி முதன்மை நிர்வாகி முனைவர் மாணிக்கம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி நீதியரசர் ராஜேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய முன்னாள் நீதிபதி நீதியரசர் ராஜேஸ்வரன், நாம் செய்கின்ற வேலையில் கடின உழைப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை தரும் என்றார். நல்ல வாய்ப்புகள் விலகினாலும்,கிடைக்கும் வாய்ப்பில் கடினமாக உழைத்தால் பல மடங்கு வெற்றி கிடைக்கும் என்பதை சுட்டி காட்டிய அவர்,

இன்று வெற்றியாளர்களாக இருப்பவர்கள் அனைவரும் கடின உழைப்பால் முன்னேறியவர்கள் என தெரிவித்தார். எதை செய்ய வேண்டும் என்று கூறுவது அறிவு என்ற அவர், எதை செய்ய வேண்டாம் என்று கூறுவது அனுபவம் என குறிப்பிட்டார்.

ஒன்றை ஆசைபடுவது,அதன் மேல் நம்பிக்கை வைப்பது,அந்த நம்பிக்கை நிறைவேறும் வரை உழைப்பது என்பதை இன்றைய மாணவர்கள் கடைபிடித்தால் வாழ்வில் வெற்றி நிச்சயம் என அவர் கூறினார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த தொழில் முனைவோர்கள் விருது
கோவை பழமுதிர் நிலையத்தின் நிறுவனர் நடராஜன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி செந்தில் நடராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

இதே போல (TABP) டி.ஏ.பி.பி.குளிர்பானம் மற்றும் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பிரபு காந்திகுமார் சிறந்த தொழில் முனைவோர்க்கான விருதை பெற்றார்.

தொடர்ந்து சிறந்த சூப்பர் ஸ்டார்ட் அப் விருது பீ லிட்டில் நிறுவனத்தின் நிர்வாகிகள் காயத்ரி,சூர்ய பிரபா,சக்தி பிரியா ஆகிய மூவருக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்,
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஆர்த்தி, இரத்தினம் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் பாலசுப்பிரமணியன் துணை முதல்வர் முனைவர் சுரேஷ் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.