• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் அனுமதி அளித்தால் வரலாற்றில் நிற்பார்கள் – செல்லூர் ராஜு

Byமதி

Dec 12, 2021

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை தீபா, தீபக் தாமாக முன்வந்து நினைவிடமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாற்றில் நிற்பார்கள் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி அளித்துள்ளார்.

மதுரை பெத்தானியபுரம் ராயல் பப்ளிக் பள்ளியில் ஆர்.ஜெ தமிழ்மணி சாரிடபிள் அன் எஜிகேஷன் ட்ரஸ்ட் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ சிகிச்சை முகாமை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ துவங்கி வைத்து பார்வையிட்டு பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்
வேதா இல்ல விவகாரத்தில் அதிமுக சார்பாக மேல் முறையீடு செய்வோம். கட்சியின் நிதியை பயன்படுத்தி அந்த இடத்தை வாங்குவது குறித்து கட்சியின் தலைமை தான் முடிவு.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த இடம், அங்குதான் அவர்கள் உலகத் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார். எனவே அந்த இடத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அங்கு வந்து இல்லத்தைச் சுற்றி பார்க்க இந்தியா மட்டுமல்லாமல் உலக சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவர்.

ஜெயலலிதா அவர்களின் உறவினர் திபா தீபகிற்கு நான் வைக்கும் வேண்டுகோள்: அவர்களாக முன்வந்து வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அனுமதி அளித்தால் வரலாறு அவர்களைப் பற்றி பேசும் வரலாற்றில் நிலைத்து இருப்பார்கள், மற்ற இடங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளட்டும் அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக முதல்வரை பாராட்டாவிட்டாலும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று கூறிய கருத்திற்க்கு: நீதிபதியின் கருத்துக்கு நான் கருத்து கூற விரும்பவில்லை. ஆனால், சமீபத்தில் பெய்த பெருமழையால் உணவில்லாமல் துன்பப்பட்ட மக்களை சந்தித்த பின் நீதியரசர் இந்தக் கருத்தைக் கூறியிருக்கலாம்.

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டதாக முதல்வருக்கு விமானப்படை பாராட்டு தெரிவித்தது என்ற கேள்விக்கும்

“தமிழக முதல்வரை பாராட்டினால் நல்லது தானே என்றார்”

ஆனால், அவர் மெத்தனமாக செயல்படுகிறார். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன முன்னாள் அமைச்சார் செல்லூர் ராஜூ.

உலகத் தமிழ் சினிமாவில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு மக்கள் நலனிலும் பொது நலனில் அக்கறை கொண்ட ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

அவரின் ரசிகர் என்ற முறையில் அவருக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் மேலும் பல படங்களில் நடித்து மக்களுக்கு தேவையான கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.