• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி.,

BySeenu

Dec 15, 2025

2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் டிரினிட்டி கான்கிளேவ் நிகழ்ச்சி நடைபெற்றது

அரசு பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள் மற்றும் மத்திய அரசின் வங்கி, ரயில்வே துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைத் துணிவுடன் அணுகி வெற்றி பெற வழிகாட்டும் நோக்கில்,சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கிராஸ் கட் ரோடு கிளையில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.

‘டிரினிட்டி கான்கிளேவ்’ என்னும் இந்த நிகழ்ச்சியில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும் கனரா வங்கியின் மூத்த மேலாளர் சூர்யா பசவராஜு, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் மூத்த மேலாளர் கார்த்திக்; மூத்த அஞ்சல் துறை அதிகாரி காசி விஸ்வநாதன் மற்றும் மத்திய கலால் மற்றும் ஜிஎஸ்டி ஆய்வாளர் தினகர் ஆகியோர் இந்நிகழ்வின் பிற சிறப்புரையாளர்களாகக் கலந்து கொண்டனர். இதில் அகாடமியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.

மாணவர்களிடையே உரையாற்றிய கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மத்திய அரசில் வேலைவாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகக் கூறினார். சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், மத்திய அரசுப் பணிகளுக்கும் முயற்சிக்க வேண்டும் என்றும், தங்கள் முயற்சியில் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

பெரும்பாலான மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வலுவாக உள்ள நிலையில், அவர்கள் ஹிந்தி மற்றும் ஒரு அயல்நாட்டு மொழி என மேலும் இரண்டு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் ஆலோசனை வழங்கினார். நான்கு மொழிகளைத் தெரிந்திருப்பது நிச்சயம் அவர்களது தகுதிக்கு வலு சேர்க்கும் என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சிக்குப் பின் பேசிய சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் மற்றும் வங்கிப் பிரிவுத் தேர்வுகள் துறை தலைவர் சிபி, இந்த ‘டிரினிட்டி கான்கிளேவ்’ அகாடமியின் ‘மிஷன் 300’ திட்டத்தின் ஒரு பகுதி என குறிப்பிட்டார். கோயம்புத்தூரில் இருந்து 300 மாணவர்களைத் தயார்படுத்தி, 2026-ஆம் ஆண்டில் அவர்களை மத்திய அரசுத் தேர்வுகளில் வெற்றி பெறச் செய்வதே ‘மிஷன் 300’ திட்டத்தின் நோக்கம். இந்நிகழ்வு அதை நோக்கி எடுத்து வைக்கப்பட்ட ஒரு படி,” என்றார்.