அருந்தியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு, தேவேந்தர குள வேளாளர்களும், ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்தாக சொல்வது தவறு என்றும், அதனால் அருந்ததியர்க்கு இடஒதுக்கீடு கொடுக்ககூடாது என்று சொல்லவில்லை.
அனைவருக்கும் இடஒதுக்கீடு கொடுங்கள். ஆனால் சிலருக்கு மட்டும் முன்னிரிமை கொடுக்காதீரகள் என்று தான் சொல்கிறேன் என புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த புதிய தமிழக கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி..,
கடந்த 5 தினங்களுக்கு முன்பு மேற்குவங்கத்தில் உள்ள மருத்துவமனையில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை புதிய தமிழகம் கட்சி வண்மையாக கண்டிப்பதாகவும்,அண்மையில் தான் சுதந்திர தினம் கொண்டாடினோம்.
இவ்வேலையில், தாம் பணிபுரிகிற மருத்துவமனையில் பாலியல் துன்புறுத்தி
கொலை செய்யபட்டதை வன்மையாக கண்டிப்பதோடு ,முழுமையான விசாரணை வேண்டும்.என அவர் கேட்டுக்கொண்டார்.
கல்கத்தாவில் சட்டம் ,ஒழுங்கு இருக்கிறரதா என்று தெரியவில்லை. ஆனால்
கல்கத்தாவில் கலவரம் நீடிக்கும் நிலையில் மாநில அரசிடம் உள்ள சட்டம் ,ஒழுங்கை மத்திய அரசு நேரடியாக கண்கானிக்க வேண்டும் எனவும் வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க் வேண்டும்.நிர்பாயம் வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவில்லை. அதுபோன்று இந்த வழக்கிலும் இருக்க கூடாது.
மருத்துவர்களின் அச்சத்தை மத்திய ,மாநில அரசுகள் போக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் நீலகிரி, கோவை ,திண்டுக்கல், மஞ்சோலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலை பகுதியில் 1920 களிலிருந்து தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களை கட்டாயப்டுத்தி வெளியேற்ற கூடாது. மாஞ்சோலையில் ஆறு தலைமுறைகளாக தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். கம்பெனி குத்தகை முடிந்தவுடன் வெளியேற வேண்டும் என்று வனத்துறை சார்பில் கட்டாய படுத்தப்படுத்துவதாகவும், வன உரிமை சட்டப்படி அவர்கள் அங்கு வாழ உரிமை பெற்றவர்கள். ஆனால், அரசு அவர்களை வெளியேற்ற கட்டாயபடுத்துவதாக குற்றம்சாட்டிய அவர், நிலத்தை அவர்கள் சொந்த கொண்டாவில்லை. அவர்கள் அங்கு வாழத்தான் இடம் கேட்கிறார்கள். என அவர் தெரிவித்தார்.இந்தியாவில் அரசியல் சாசனத்தில் பட்டியிலனத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வியிலும் ,நிலத்திலும் பல்வேறு சலுகைகளை வழங்கு வருகிறோம்.
ஆனால் தேவந்திர குள வேளாளர்களுக்கு ,ஆதிதிராவிட சமூகத்தினருக்கும் உயர்பதவியில் இதுவரையும் இடஒதுக்கீடு கிடைக்காமல் இருப்பது மிகப்பெரிய அநீதி. என்று குற்றம் சாட்டிய கிருஷ்ணசாமி,இதை சரிசெய்வதற்க்கு தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்றும் தேவந்திர குள வேளாளர்கள் ,அருந்ததியர் ,ஆதிதிராவிடர்களில் முக்கியமான பிரதிநிதிகளை அழைத்து முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும் எனக்கேட்டுக்கொண்டார்.
இவர்களின் உரிமை அநிநியாமாக பறிக்கபடுவதாகவும், இட ஒதுக்கீடு சம்பந்தமாக சமூகவலைதளத்தில் தேவையான விவாவதங்கள் சர்ச்சைகள் உருவாகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும்.எனகேட்டுகொண்ட கிருஷ்ணசாமி, அருந்தியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு தேவேந்தர குள வேளாளர்களும் ,ஆதிதிராவிடர்களுக்கும் இடஒதுக்கீடு கொடுத்தாக பேசப்படுவது தவறு என்றும் இது
இயற்கையான நிதியை கொடுக்கவில்லை எனவும், ஆனால் அருந்ததியர்க்கு இடஒதுக்கீடு கொடுக்ககூடாது என்று சொல்லவில்லை. அனைவருக்கும் இீடஒதுக்கீடு கொடுங்கள் ,ஆனால் சிலருக்கு மட்டும் முன்னிரிமை கொடுக்காதீரகள் என்று தான் சொல்கிறேன் என அவர் தெரிவித்தார்.
ஆனால் எஸ்.சி பட்டியலிலிருந்து தேவந்திர குலவேளாளர்களை வெளியேற்றிவிட்டால் நான் கும்பிடு போட்டு போயிடுவேன் என்று கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
